Sunday, August 5, 2018

மெனுவையாவது சொல்லுங்க சார்களே . . .


தமிழகத்து ஊடகத்து முதலாளிகளே,

அழைத்ததனால் சென்றீர்களோ?
இல்லை நீங்களாகவே விரும்பி சென்றீர்களோ?

உங்கள் கோரிக்கைகளுக்காக சென்றீர்களோ?
இல்லை அவரின் கோரிக்கையை கேட்க சென்றீர்களோ?

சென்றதனால் உங்களுக்கு லாபமோ?
இல்லை அவருக்கு லாபமோ?

இருவருக்குமேதானோ?

அடுத்தவர் வீட்டு நிகழ்வென்றால்
திருமணமோ இல்லை மரணமோ,
நள்ளிரவில் கூட முறிப்புச் செய்தி போட்டு
உறக்கத்தை கலைப்பவர்கள் நீங்கள்.

உங்கள் சந்திப்பைப் பற்றி
ஒரு நிமிடச் செய்தி கூட 
எந்த தொலைக்காட்சியிலும் காணோம்.

ஒரு பத்திச் செய்தி கூட
எந்த நாளிதழிலும் 
ஒரு ஓரத்திலும் காணோம்.

சரிங்க சார்களே,
சந்திப்பின் விவரம் கூட தெரிய வேண்டாம்,
நீங்கள் சாப்பிட்ட விருந்தின்
மெனுவையாவது பட்டியலிடுங்கள்,
உங்களுக்கான கவனிப்பின்
கனத்தை அதை வைத்து
அறிந்து கொள்கிறோம்.

3 comments:

  1. இது போட்டோ ஷாப் ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

    தவறான தகவல்களை தந்ததாக இருக்க வேண்டாம் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பு நடந்தது உண்மைதான்

      Delete
  2. அவனவனுக்குனு வவுத்து பொழப்பு இருக்குல. அவன் மீடியாவ மோடி மூடிட்டானா நீயா சோறு போடுவ. கவலபடாதே 2019 ஆச்சிமாற்றம் ஆனவுடனே இவனுகலெல்லாம் அவனுகள பாக்கபோயிருவானுக

    ReplyDelete