தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.
அற்புதமான ஒரு சிந்தனை. அதனை அமலாக்கியவிதம் அருமை. மதுரை புறநகர் மாவட்ட தமுஎகச, நாகமலை கிளைத் தோழர்களுக்கும் தமுஎகச பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழகத்தின் ஹாசினி தொடங்கி, காஷ்மீர் ஆசிஃபா வரை குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் அவலமும் அவமானமும் நிறைந்த இந்நாட்டின் தேசியக் கொடியை இந்தாண்டு ஏன் ஒரு பெண் குழந்தை ஏற்றி வைக்கக் கூடாது? என யோசித்தார்கள், எம் மதுரை புறநகர் மாவட்ட தமுஎகச, நாகமலை கிளைத் தோழர்கள். அந்த ஆலோசனை ஏகமனதான ஏற்கப்பட...
நேற்று நடைபெற்ற 24 ஆவது கலை இலக்கிய இரவில், நள்ளிரவு 12 மணிக்கு மக்களிசைப் பாடகன் கரிசல் கருணாநிதியின், உணர்ச்சிகரமான
"புதுயுக நாயகரே
பாரதப் புரட்சியின் தூதுவரே,
வந்தே மாதரத் தாரகை மந்திரம்
மறுபடி இசைத்திட வாருங்கள்..."
என்ற பாடல் ஒலிக்க,
8 வயது குழந்தை எஸ்.நிஃபிக்சா, கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாரதியின் கணல் வரிகளைப் பாடி வீதியை உறைய வைத்தாள்!
இதே போன்றொரு கலை இலக்கிய இரவு மேடையில்தான், மரியாதைக்குரிய மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் "இந்த தேசம் இளைஞர்கள் கையில் பத்திரமாய் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று கண்ணீர் வழியச் சொன்னது நினைவில் வந்து மோதுகிறது!
சீன சுதந்திர தினம் என்று நினைச்சு ரொம்ப பொங்குறீங்க தோழரே
ReplyDeleteநேற்று இந்திய சுதந்திர தினம்
கேடு கெட்ட கோழை அனானியே,
Deleteஇந்திய சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த, சிறை சென்ற தியாகப் பாரம்பரியம் எங்களுடையது.
விடுதலை வீரர்களை காட்டிக் கொடுத்த, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த திருட்டுப் பாரம்பரியம் உன்னுடையது.
போடா, போ, போய் அம்பானிக்கும் அதானிக்கும் கூஜா தூக்கு