எட்டு வழிச்சாலைக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் "என் நிலம், என் உரிமை" நடைப்பயணத்திற்கு எடுபிடி அரசு தடை விதித்தது, தடையை மீறி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட துவக்க நிகழ்ச்சி எழுச்சியோடு நடந்தது.
அதன் பின்பு நடைப்பயணம் தொடங்கியதும் காவல்துறையின் கைது படலமும் தொடங்கியது.
திருமண மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுதலை செய்தாலும் விடுவிக்க்ப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் நடப்போம் என்று கம்பீரமாக அறிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன்.
அதனால் யாரையும் விடுவிக்காமல் பம்மியது அரசு.
".நீ என்ன எங்களை விடுவிப்பது? நாங்களே வெளியே வந்து பயணத்தைத் தொடர்வோம்"
என்று தோழர்கள்
கல்யாண மண்டபமெனும் சிறையிலிருந்து வெளியேறி
பயணத்தை தொடர
மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அநேகமாக இனி கல்யாண மண்டபங்களுக்கு அவசியம் இருக்காது. நேரடியாக சிறைச்சாலையாக இருக்கலாம்.
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் செல்லும் தோழர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பற்ற வைத்துள்ள போராட்டத்தீ பரவட்டும் தமிழகம் எங்கும் . . .
No comments:
Post a Comment