Tuesday, August 28, 2018

நாங்கதான் அப்போவே சொன்னோம்ல !!!





காஷ்மீர் ராணுவ தளபதியான லீடுல் கோகாய், ஒரு பதினெட்டு வயது பெண்ணோடு ஒரு விடுதியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதான் என்று நிரூபணமாகி விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. விதிகளை மீறிய குற்றத்திற்காக ராணுவ நீதிமன்றம் அவருக்கான தண்டனையை முடிவு செய்யும்.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இடைத் தேர்தலின் போது ஒரு அப்பாவி வாலிபரை ஒரு ஜீப்பின் முன்னே கட்டி வைத்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உலா வந்தது இந்த அதிகாரிதான். இந்த அராஜகத்தை ஒரு வீரச்செயல் என்று “பல உயரதிகாரிகளின் பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி மோடியால் ராணுவ தளபதியாக்கப்பட்ட” பிபின் ராவத் பாராட்டி விருதும் அளித்தார்.

கோகாயின் நடவடிக்கைகள் வில்லங்கமானது. பதட்டம் நிறைந்த காஷ்மீரின் சிக்கல்களை அதிகரித்து தேவையற்ற மோதல்களை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்று முன்பே எழுதி உள்ளேன் என்பதை நினைவு படுத்த விழைகிறேன்.

ராணுவ சிறப்பு அதிகாரச்சட்டம் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு கோகாய் ஒரு எடுத்துக்காட்டு.

அவர் மீது ராணுவ நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும், அவரது அராஜகத்தை வீரச்செயல் என்று பாராட்டி விருது அளித்து மேலும் உசுப்பேத்தி விட்ட பிபின் ராவத், தார்மீக அடிப்படையில் பதவி விலகுவாரா?


No comments:

Post a Comment