மனித உரிமை செயற்பாட்டாளர் திரு எவிடென்ஸ் கதிர் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன் . . .
கடந்த 22 வருடங்களாக மனித உரிமை களத்தில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் நடந்த சுமார் 150 காவல் நிலைய மற்றும் போலி மோதல் கொலைகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை தமிழ் நாட்டில் ஒரு காவல் நிலைய கொலைகளுக்குக்கூட உரிய நீதியும் மறுவாழ்வும் கிடைத்ததில்லை. ஆனால், கேரளாவைக் கண்டு அசந்து போயிருக்கிறேன்.குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு என்னை வியக்க வைக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு கேரளாவில் உதயக்குமார் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
கொலை செய்த 2 போலிஸாராருக்கு CBI நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்புக் கிடைக்க 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால் கேரளாவின் CPM அரசு உதயக்குமாரின் தாயார் பிரபாவதி அம்மாவிற்கு தன்னுடைய மகன் கொல்லப்பட்ட சமயத்திலேயே 13 லட்சம் ரூபாய் நிவாரணமும்
3 பெட் ரூம் 1 ஹால் 1 கிச்சன் கொண்ட ஒரு பெரிய வீட்டினை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.அந்த வீடு திருவனந்த புரத்தின் மெயின் பகுதியில் உள்ளது.தற்போது அந்த வீட்டின் மதிப்பு குறைந்தபட்சம் 2 கோடி இருக்கும். அது மட்டுமல்லாமல் போலிஸாருக்கு எதிராக CPM அரசு வழக்கினைத் திறம்பட நடத்தியது.
நமது தமிழ் நாட்டில் காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு படி மண் கூட கொடுத்ததில்லை . உண்மையில் சமூகநீதி கேரளாவில் தான் தழைத்து இருக்கிறது. கெஞ்சிக் கேட்டு பெறுகிற நீதியைவிட தனி மனித வலியை தன் வலியாக உணர்ந்து அரசு நீதி கொடுக்கிற பட்சத்தில் ,
அந்த நீதியில் தான் அம்பேத்கரின் கனவு அடங்கி இருக்கிறது.
பிரபாவதி அம்மாவின் கண்களில் அம்பேத்கரைக் கண்டேன். அவரது நம்பிக்கையில் பினராய் விஜயனைக் கண்டேன் .
'எனக்கு பினராய் விஜயனை ரொம்ப பிடிச்சிருக்கு' என்ற பிரபாவதி அம்மாவிடம் சொல்ல மறந்தேன். அது என்னவென்றால்,
எனக்கும் தான் அம்மா என்று.
நீதியன்பு❤
ஆயுத பூஜை அன்று ஏடு தொடக்கும் அறிவாளி பினராய் விஜயன் வாழ்க
ReplyDeleteசங்கிகளை விட மோசமான கட்டுக்கதைகளை உ.பி க்கள் பரப்புகிறார்கள்
Deleteஅருமையான மீள்பதிவு. எவிடென்ஸ் கதிருக்கும் தங்களுக்கும் நன்றி.
Deleteஇங்கே என்றால் போலிஸ் மக்களுக்கெதிராக செய்யும் குற்றங்களுக்கு தமிழக அரசு அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும்.
ReplyDeleteமனிதர்களை கேவலமாக நடத்தும் இந்திய போலீஸ் நடைமுறைக்கெதிரான கேரள அரசின் செயல்களுக்கு பாராட்டுக்கள்.