Monday, August 27, 2018

டுபாக்கூர் சாமியாரின் 500 டன் ட்ரக்





மேலே உள்ள செய்தியைப் படித்தீர்களா?

டுபாக்கூர் சாமியார் சீ சீ ரவிசங்கர்,  60 ட்ரக்குகளில் கேரளாவிற்கு  நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளாராம். ஒவ்வொரு ட்ரக்கிலும் 500 டன் அளவிற்கு பொருட்கள் உள்ளதாம். 

மிகப் பெரிய மல்டி ஆக்ஸில் லாரியாக இருந்தாலும் கூட ஐம்பது டன் எடை ஏற்றுவதே மிகவும் சிரமமாக இருக்குமாம். இவர் சாமியாராக இருப்பதால் மந்திர தந்திரம் செய்து இருப்பாரோ?

கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

என்ன செய்ய?

இன்னோவா கார்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான குஜராத்திகளை மோடி காப்பாற்றியதாக விடப்பட்ட கதையை நம்பவும்

அறுபதாயிரம் யானைகள், அவற்றின் பாகன்கள், வீரர்கள், ஆயுதங்கள், அனைவருக்குமான உணவு என்று அனைத்தையும் ஒரே கப்பலில் ஏற்றினார்கள் என்று சீமான் விட்ட கதையை நம்பவும்

இளிச்சவாயர்கள் உள்ள நாட்டிலே

டுபாக்கூர் சீ சீ ரவிசங்கர் விடும் கதையை நம்பவும் 

ஆட்கள் இல்லாமலா இருக்கப் போகிறார்கள் !!!!!!


15 comments:

  1. ஒரு நாடு முன்னேரனுமுனா மக்களுக்கு சுய சிந்தனை கூடாது. தலைவன் கூறுவதை கண்மூடிதனமாக செய்யவேண்டும். 5 டண்னா இல்ல 5000 டண்னா இல்ல டண்டனக்கா டண்னா அப்பிடினு மூளைய கசக்கி யோசிக்கககூடாது. ஆப்பிடி யோசிச்சா நாடு வெளங்காம பூடும். மூள சொல்லுரத காலு கேட்டு 'நடந்தா' ஊர் போயிசேரலாம், இல்லனா காலு வெளங்காம பூடும். நம்ம ரவிஜி மூள மாதிரி நாம காலு மாதிரி.
    இப்படிக்கு,
    சங்கி-மங்கீஸ்,
    C/o, மைலாப்பூர் மாபியா,
    ஸென்னை-420 420

    ReplyDelete
  2. சாமியார் ஒரு பக்கம் இருக்கட்டும்
    உங்க தலீவர் பிணராய் விஜயன் அமீரகம் 700 கோடி தருவதாக பொய் சொல்லி அசிங்கப்பட்டு கொண்டிருக்கின்றார்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. நான் இதை எதிர்பார்த்தேன். அமீரக உதவி குறித்து மோடி முதலில் போட்ட ட்வீட் எந்த அடிப்படையில் அனானி?

      சங்கிகளின் அயோக்கியத்தனத்தினால் அந்த நாடு தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள அப்படி அறிவிக்கும் நிலை உருவானது என்பது சின்ன குழந்தைகளுக்கும் புரியும்.

      மேலும் மருந்துகள் உட்பட 170 கோடி ரூபாய்க்கு அங்கிருந்து பொருட்கள் வந்துள்ளது என்பது தெரியுமா?

      கேரளத்தின் மீதான காவி அயோக்கியர்களின் வெறுப்பும் வெறியும்தான் அம்பலமாகி உள்ளது.

      சரி, சீ சீ ரவிசங்கர் சாமியாரின் டுபாக்கூர் வேலை பற்றி பதில் சொல்லுங்க பார்ப்போம்.

      Delete
    2. ஆமாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாவிட்டால் திசை திருப்பும் கேவலத்தை காவி அயோக்கியர்கள் எப்பொது கைவிடப் போகிறார்கள்?

      Delete
    3. மோசடிகளில் இருந்து திசை திருப்பும் வேலைகளை அநாமதேயர்கள் செய்து வருவதை நானும் அவதானித்து இருக்கிறேன்.

      Delete
  3. this is far better than the belief and fake propaganda that commie is loyal to india and faithfully serve indians

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். காவி அயோக்கியனுங்கதான் தேச பக்தனுங்க.
      டேய் போடா, ஒழுங்கா தமிழ் கத்துக்கிட்டு தமிழில் எழுது.
      பொறுக்கித்தனம் மட்டுமே செஞ்சிகிட்டு எப்படிடா இவ்வளவு திமிரா எழுத முடியுது?

      Delete
  4. https://www.facebook.com/nambikairaj/posts/2400989566600323?__xts__%5B0%5D=68.ARCwCCBK3UUBTjLwNpS3y8lQjzD-mQkgQa_LDJBt66s3WTCtECkrMq3BTQ0LVRTWC1D1UvxXFysRFF7C78Io5Q5U9R4uksmTQKuukLrwWdpN8dEkppoLPqA3sJAmH_k36Lhs0cc&__tn__=-R

    ReplyDelete
  5. #700கோடி நம்பிக்கை ராஜ்

    எதிராளிக்கு பார்த்து பார்த்து செதுக்கிய ஆப்பில் தானேப்போய் உட்கார்ந்த தானைத் தலைவன் பினராயி.

    இயற்கை பேரிடரில் சிக்கிய கேரளாவிற்கு உதவி செய்யும்படி வளைகுடா வாழ் கேரள தொழிலதிபர் ஒருவர் நிதியுதவி கேட்டு எண்ணெய் வளமிக்க ஒரு நாட்டின் மன்னரிடம் போனார். மன்னரும் குறிப்பிட்ட தொகையை நிதியுதவி செய்வதாக சொல்லியிருக்கிறார். அந்த உதவி குறித்து அரசாங்க ரீதியிலான பணிகள் இங்கு நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் வளைகுடா வாழ் கேரள தொழிலதிபர் கேரளாயிஸ்ட் முதல்வர் பினராயியை தொடர்புகொண்டு unofficial ஆக இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.

    அதே நேரத்தில் கேரளாவில் அரசியல் ரீதியான நெருக்கடி அதிகரிக்கிறது. 44 அணைகளை போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் திறந்துவிட்டு பேரழிவை ஏற்படுத்தியதே கேரள அரசுதான் என எதிர்கட்சிகள் மக்களை உசுப்பிவிட அதை சமாளிக்க முடியாமல் தவித்துவந்தார் சகாவு.

    தமிழகத்தின் முல்லை பெரியாறு அணையால்தான் இடுக்கி அணையில் கூடுதல் தண்ணீர் திறந்து வெள்ளக்காடானது என இவர் சொன்ன கதை பெரிதாக எடுபடாமல் போனது.

    அந்த நேரத்தில்தான் வளைகுடா நாடு ஒன்று 700 கோடி நிதியுதவி செய்யவுள்ளதாக ஒரு முக்கிய நபர் சொல்ல அதை வைத்து மக்களை திசைதிருப்ப தடாலடியாக அந்த 700 கோடி அறிவிப்பை வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பை அவசரஅவசரமாக வெளியிட இரண்டு காரணங்கள்.

    1. மோடி அரசே வெறும் 600 கோடிதான் ஆனால் வெளிநாட்டு அரசு ஒன்று 700 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது பாருங்கள் மலையாளிகளே! என மலையாளிகளை உசுப்பிவிட்டு அவர்களை மோடி எதிர்ப்பில் திசைதிருப்பி எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய 44 அணைகள் திறந்துவிட்ட மேட்டரில் இருந்து எஸ்கேப் ஆவது.

    2. வளைகுடா அரசு 700 கோடி ரூபாய் பணத்தை கொடுப்பதாக அறிவிக்க சற்று கால அவகாசம் அந்த அரசுக்கு தேவை. ஒரு அரசாங்கம் வெளிநாட்டு விவகாரம் குறித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரஅவசரமாக முடிவெடுக்க முடியாது.
    அந்த வளைகுடா நாட்டின் அரசு அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள தூதரகங்கள் அனைத்தும் ஒரு வாரம் பக்ரீத் விடுமுறையில் இருந்தன. விடுமுறை முடிந்தபிறகு ராஜாங்க ரீதியாக இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு முறைப்படி அவர்களுக்கு தெரிவித்த பிறகுதான் அந்த வளைகுடா நாடு 700 கோடி நிதியுதவியை முறைப்படி அறிவிக்க முடியும்.

    ஆனால் நடைமுறைகளை மீறி பினராயி விஜயன் இதை தன் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டார்.

    முதலில் மோடியும் இதில் சிக்கிக்கொண்டார். பினராயி விஜயன் அறிவித்த உடனே மோடியும் தன் டுவிட்டர் பக்கத்தில் அந்த வளைகுடா நாட்டின் ஆட்சியாளர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் உதவுவதாக சொன்னதற்கு நன்றி தெரிவித்தேன் என தெரிவித்திருந்தார்.

    அதன் பிறகு 'இந்தியா 600 கோடி, வளைகுடா நாடு 700 கோடி' என்ற கோஷம் பாஜகவிற்கு கடுப்பேற்றியது.

    நம் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சூழலிலும் பினராயி எவ்வளவு தந்திரமாக அரசியல் செய்கிறார் என்ற கடுப்பு பாஜகவிடம் தெரிந்தது.

    எங்க வாய்ப்பு கிடைத்தாலும் சும்மாவே ஆடக்கூடிய பாஜகவிற்கு பினராயி சலங்கையைவேற கட்டி விட பிறகு சொல்லவா வேணும்?

    தங்களுக்கு எதிராக வந்த 700 கோடி அஸ்திரத்தை தடுத்து அதை மீண்டும் பினராயி மேலேயே ஏவியது பாஜக.

    பேரிடர் காலங்களில் வெளிநாட்டு நிதியை ஏற்றுகொள்வதில்லை என்பது 2004ம் ஆண்டில் மன்மோகன்சிங் அரசு எடுத்த கொள்கை முடிவு என சொல்லி சகாவு தலையில் கல்லை தூக்கி போட்டது பாஜக.

    இதற்கிடையில் திருவனந்தபுரத்திலிருக்கும் அந்த வளைகுடா நாட்டின் தூதரகத்தை மாநில பாஜக அனுகி '700 கோடி தரப்போறீங்களா?' என கேட்க 'நாங்க எப்போ 700 கோடி தரோம்னு சொன்னோம்?' என பதில் கேள்வி கேட்டார் அந்நாட்டின் தூதுவர்.

    இதில் அரசியல் கலக்காமல் இருந்திருந்தால் அந்த 700 கோடி நிதி முறைப்படி கேரள மக்களுக்கு கிடைத்திருக்கும். இந்தியாவின் ஏற்றுமதியில் அந்த நாடு மூன்றாம் இடத்திலும், அந்த நாட்டின் இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. அந்த அளவிற்கு இந்தியாவுடன் மிக நெருக்கமான பொருளாதார உறவு உள்ள நாடு அது.

    இந்திய அரசு கேட்டதால் தன் நாட்டுக்குள் இந்து கோவில் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய நாடு அது.

    அந்நாட்டின் அளவுக்கதிகமாக உற்பத்தியான கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியாததால் இந்தியாவில் அதை கொண்டு வந்து சேமித்துக்கொள்ள அனுமதி கொடுத்த நாடு இந்தியா.

    இந்த இரண்டு நாடுகளுக்கிடையே 700 கோடி ரூபாய் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு பெரிய பிரச்சினை இல்லை.

    இந்தியாவின் உள்ளூர் அரசியல்தான் பிரச்சினை.

    தன் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜகவின் ஈகோவை சீண்டிவிட்டு ஆப்பசைத்த குரங்கின் நிலையில் சிக்கிக்கொண்டார் கேரளாயிஸ்ட் பினராயி.

    ReplyDelete
    Replies
    1. பாவம் ரொம்ப கஷடப்பட்டு காவி அயோக்கியனுங்களுக்கு முட்டு கொடுத்திருக்கீங்க . . .

      Delete
  6. நன்றி இல்லாத பிணராய் விஜயன்

    வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணை தான் காரணம் என்று கேஸ் போட்டிருக்கான்

    கேவலமான ஈத்தரை பிறவி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீ பெரிய உத்தம பிறவி

      Delete
  7. நான் எப்படியோ இருந்திட்டு போகின்றேன்
    பிணராய் விஜயன் கேஸ் பற்றி தங்கள் கருத்து என்ன ?
    முல்லை பெரியாறு அணையை உடைக்கணுமா ?
    முல்லை பெரியாறு அணைத்தான் கேரளா வெள்ளத்துக்கு காரணமா ?
    டென்ஷன் ஆகாம பதில் சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகள் ஒழுங்காக இருந்தால் கண்டிப்பாக பதில் கொடுத்திருப்பேன். அசிங்கமாக பேசி விட்டு டென்ஷன் ஆகக் கூடாது என்பதில் அர்த்தமில்லை தெய்வப் பிறவியே

      Delete
  8. சாமியாரல்லவா அவர் சொர்க்கலோகத்தில் இருந்து வரவழைக்கபட்ட ட்ரக்கில் நிவாரணப் பொருட்களை அனுப்பியிருப்பார்.அவை ஒவ்வொன்றும் 500 டன் பொருட்களை தாங்கி செல்லும் திறன் கொண்டவை.

    ReplyDelete