தமிழகத்தின் முதுபெரும் தலைவர், முன்னாள் முதல்வர், திமுக வின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு பெரும் துயரத்தை அளிக்கிறது.
கதாசிரியராக தமிழக மண்ணிலே முத்திரை பதித்தவர். பராசக்தி திரைப்படத்தின் அனல் பறக்கும் வசனங்கள் மூலம் புதிய விவாதங்களை உருவாக்கியவர்.
தமிழ் இலக்கியத்தை எளிமையாக்கி பாமரர்களிடமும் எடுத்துச் சென்றவர்.
கரகர குரலிலே அனைவரது உள்ளங்களையும் ஈர்த்தவர்.
அவசர நிலைக் காலத்தை உறுதியாக எதிர்த்த பெருமைக்குரியவர்.
சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனையாளர்.
தமிழக முதல்வராக, திமுக தலைவராக சமூக நீதியை நிலை நாட்ட பாடுபட்டவர்.
திமுக தொண்டர்கள் அவரை நேரில் பார்த்து, குரலைக் கேட்டு ஓராண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் தங்கள் தலைவர் மீதான பாசம் கொஞ்சமும் குறையவில்லை என்பது பத்து நாட்களுக்கு மேலாக அவர்கள் மருத்துவமனையில் குவிந்து இருந்ததிலிருந்து நிரூபணமானது.
தமிழகத்தின் தவிர்க்க இயலாத முக்கியத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு எனது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
For civilised tamilians, diwali came 2 months early.
ReplyDeleteநல்லா தெரியுதுடா உங்க நாகரீகம்
Delete