இன்று நவம்பர் புரட்சி தினம். உழைப்பாளி மக்கள் தலைமையில் ஒரு ஆட்சி உருவான தினம். எல்லோரும் எல்லாமும் பெற முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திய தினம். அதனாலேயே முதலாளிகள் அஞ்சி நடுங்கிய தினம்.
ரஷ்யப் புரட்சி நடந்த இந்த இனிமையான நாளுக்கு இனிமை சேர்ப்பது போல கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
மாநிலத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான நல்லதொரு துவக்கத்தை கேரள மக்கள் அளித்திருக்கிறார்கள்.
இந்த மாற்றத்தை நாளை தமிழகத்திலும் உருவாக்கும் கடமை தமிழக மக்களுக்குத்தான் இருக்கிறது.
உண்மையாகவே யார் அவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை தமிழக மக்கள் மட்டும் உணர்ந்து கொள்ள மாட்டார்களா என்ன?
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை அளித்த கேரள மக்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமுகம் காட்ட முடியாத கோழை அனானி ஒருவன் என்னை தம்பி என்று அழைப்பது அருவெறுப்பாக இருக்கிறது. இதிலே அவர் கேள்வி கேட்பாராம், நான் பதில் கொடுக்கனுமாம்.
ReplyDeleteமாற்றங்களை வரவேற்போம்! தகவலுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteSir
ReplyDeleteOne more good news
மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; பிஹாரில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார்