மகிழ்ச்சியளித்த ஒரு வரலாற்றுப் பதிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை, போராட்டங்களை, தியாகங்களை,
மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தக வடிவில் ஆவணமாக்கி வருபவர் மூத்த
எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன்.
“தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும்
வளர்ச்சியும்” என்ற அவரது புதிய பிரம்மாண்டமான நூல், 1964 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் மேற்கொண்ட போராட்டங்களை பதிவு
செய்துள்ளது.
592 பக்கங்கள் கொண்ட இந்த நூலை புரட்டிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட இரண்டு
பத்திகள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
சுனாமி வந்த நேரத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொண்ட
பணிகள் பற்றி இரண்டு இடங்களில் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. எங்கள் கோட்டப்
பகுதியில் கிள்ளையில் கட்டப்பட்ட சமூக நலக் கூடம் பற்றியும் புதுச்சேரியில்
நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கியமான ஒரு நூலில் எங்களது சங்கம் ஆற்றிய பணிகள் பற்றி
எழுதப்பட்டுள்ளது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளித்தது. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்களின் உழைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் இது.
வரலாற்றில் இடம்பெறும்போது மகிழ்வே. நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete//சுனாமி வந்த நேரத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொண்ட பணிகள் பற்றி இரண்டு இடங்களில் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. எங்கள் கோட்டப் பகுதியில் கிள்ளையில் கட்டப்பட்ட சமூக நலக் கூடம் பற்றியும் புதுச்சேரியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.//
ReplyDeleteபாராட்டுக்கள்.