Sunday, November 29, 2015

சொர்க்கமே என்றாலும் அது ???????

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?"

ராஜாவின் இந்த பாடலை இன்று அதிகாலை எங்கள் வீட்டில் நுழைந்த அடுத்த நிமிடத்தில்

"சொர்க்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமா!"

என்று பாடினேன். 

ஆம். கடந்த ஞாயிறு இரவு தொடங்கிய கேரள சுற்றுப் பயணம் இன்று காலைதான் முடிந்தது.

எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், காணும் இடங்கள் எங்கும் பசுமைகள், ஆக்ரோஷத்தோடு மண்ணை நோக்கி சீறும் அருவிகள், சலசலவென்று  பாயும் ஓடைகள், அமைதியான நதிகள்,  தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மலைப்பாதைப் பயணங்கள், அலைகள் போல ஆர்ப்பரிக்கும் மேகக் கூட்டங்கள், இன்னும் பாதுகாப்போடும் உயிர்ப்போடும் இருக்கிற வனங்கள், வசதியான விடுதிகள், கனிவான சேவையால் சுவையின்மையை ஈடுகட்டும் உணவகங்கள், படகு வீட்டில் ஒரு நாள்

என்று ஒரு வார பயணம் நெஞ்சமெல்லாம் இனிக்கும் அனுபவங்களை அள்ளிக் கொடுத்திருந்தாலும்

நமது வீட்டிற்குள் நுழைந்தால் ஏற்படுகிற நிறைவே அலாதியானது.

அதைத்தான் அனுபவித்துப் பாடினேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...
எந்நாடு என்றாலும் அது நம் வீடு போல வருமா....

வேலூரிலும் இருக்கிறது இயற்கையின் வனப்பு என்று இரண்டு நண்பர்கள் அனுப்பிய படங்கள் கீழே.

சத்துவாச்சாரி மலை

 பாலாற்றில் சூர்ய அஸ்தமனக் காட்சி


பகிர்ந்து கொள்வதற்கும் பதிவு செய்வதற்கும் ஒரு வார கேரளப் பயணம் நிறையவே கொடுத்திருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன்.


3 comments:

  1. Oorey vellakaadaaka
    irukkavey!

    neengal Meetpu panikku
    poi ulleergal yena
    ninaithen!!!

    Y.Anna.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் சக்திக்கு உட்பட்ட பணியை செய்திருந்ததை முன்பே பதிவு செய்திருந்தது மட்டும் உங்கள் கண்ணில் படாமல் போனது எனது துரதிர்ஷ்டம். மேலும் மூன்று மாதங்கள் முன்பு முன்பதிவு செய்திருந்த பயணம். மோடியின் ஆட்சியில் முன்பதிவை ரத்து செய்வதற்கான கட்டணங்கள் அதிகரித்து விட்டதால் ரத்து செய்வதை விட பயணிப்பதே மேல்.

      Delete
  2. வாருங்கள்... கத்திருக்கிறோம்...

    ReplyDelete