Monday, November 9, 2015

நீதிபதிகள் நியமனம் – அம்பலமாகும் பேரங்கள்



பத்திரிக்கையாளர் தோழர் விமலா வித்யா அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலின் அடிப்படையில் எழுதப்பட்டது.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்பதையும் பல முறை சில பேரங்களின் அடிப்படையிலும் வேறு பல அம்சங்களைக் கொண்டும்தான்  நியமனங்கள் நடைபெறுகிறது என்ற உண்மையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்ஜூ அம்பலப்படுத்துகிறார். அவரது நீண்ட கட்டுரை கீழேயுள்ளது.
கொஞ்சம் நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்கவும். அந்த கட்டுரையில் சொல்லப்பட்ட மூன்று நியமனங்கள் பற்றி மட்டும் சுருக்கமாக சொல்ல முயற்சித்துள்ளேன்.
அடுத்து வரும் பத்திகள் எல்லாம் திரு மார்கண்டேய கட்ஜூ சொல்வது போல அமைந்திருக்கும்.
“ தமிழகத்தைச் சேர்ந்த திரு தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப் போவதாக செய்திகள் வந்த போது நீதிபதிகள் நியமனக்குழுவில் இருந்து பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான திரு எஸ்.கே.கபாடியாவை சந்தித்து எனது ஆட்சேபணையை தெரிவித்தேன். நான் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது திரு தினகரன் மீது நில அபகரிப்பு உட்பட பல மோசமான குற்றச்சாட்டுக்கள் வந்ததையும் சொல்லி அவரை பரிசீலனை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துக்களை நீதிபதிகள் நியமனக்குழுவில் திரு கபாடியா சொல்லவே இல்லை.

திரு தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை நீதிபதிகள் நியமனக்குழு எடுத்தாலும் அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதால் அது அப்படியே நின்று போனது. நான் சொன்னதை நியமனக்குழுவில் விவாதித்திருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்ட அவப்பெயரை தவிர்த்திருக்கலாமே என்று கேட்டதற்கு “தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், தினகரனை கண்டிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் எங்களால் எதுவும் வாய் திறக்கவே முடியவில்லை என்று கூறி விட்டார்.

அதே போல கேரள உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியை உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு வர முயற்சி நடந்தது. கேரளா மட்டுமல்லாமல் நான்கு உயர் நீதி மன்றங்கள் பார்த்தவர் அவர். வேலையில் அக்கறை செலுத்தாத அவர் ஒவ்வொரு உயர்நீதி மன்றத்திலிருந்தும் மாற்றலில் செல்லும் போது அவர் தீர்ப்பு வழங்க வேண்டிய வழக்குகள் முன்னூறிலிருந்து நானூறு வழக்குகள் இருக்கும்.

கேரள உயர்நீதி மன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவரைப் போன்றவர்களுக்கு ஆதரவாக ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது “என் இனத்திலிருந்து வேறு யாரும் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. அதனால்தான்” என்று பதில் சொல்லி விட்டார். அவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி அங்கேயிருந்து ஓய்வு பெறும் போதும் ஏராளமான வழக்குகளுக்கு தீர்ப்பெழுதாமல் போய் விட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது சகோதரரை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தன் சகோதரரை பரிந்துரைக்க கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். வழக்கறிஞராகவே சரியாக தொழில் செய்யாத அவர், நீதிபதிக்கு லாயக்கில்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலைமையில் இருந்த நீதிபதி எழுத்து மூலமாக தனது எதிர்ப்பை பதிவு செய்கிறார்.
ஆனாலும் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் சகோதரர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கிறார். அதனால் மகிழ்ந்து போன உச்ச நீதிமன்ற நீதிபதி, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக உதவுகிறார். அதே நேரம் எதிர்ப்பைச் சொன்ன மூத்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு இருந்தும் அது கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
இது போல ஏராளமான விஷயங்களைச் சொல்ல முடியும்."
இன்னமும் கூட இந்திய மக்கள் இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது மூட நம்பிக்கை ஆகாமல் பார்த்துக் கொள்வார்களா?

The hearing has begun before the Supreme Court on the question about reforming the Collegium system of appointment of judges. It is almost unanimously agreed that the collegium system lacks transparency, accountability and objectivity because of the secrecy, opaqueness and nepotism it involves, and is in need of glasnost and perestroika – as Justice Kurian Joseph said in his concurring judgment invalidating the National Judicial Appointments Commission (NJAC).
In paragraph 106 of his dissenting judgment in the NJAC case, Justice Chelameshwar said:
“As Bentham has observed, ‘In the darkness of secrecy sinister interest, and evil in every shape, have full swing..’
Transparency is an aspect of rationality. The need for transparency is more in the case of the appointment process. Proceedings of the collegium were absolutely opaque and inaccessible both to public and history, barring occasional leaks. Ruma Pal , J. is on record – “Consensus within the collegium is sometimes resolved through a trade-off, resulting in dubious appointments with disastrous consequences for the litigants and the credibility of the judicial system. Besides, institutional independence has also been compromised by growing sycophancy and ‘lobbying’ within the system.”
Justice Kurian Joseph, agreeing with the above observations, said:
“I agree with Chelameswar, J. that the present collegium system lacks transparency, accountability and objectivity. The trust deficit has affected the credibility of the collegium system, as sometimes observed by the civic society. Quite often, very serious allegations and many a time not unfounded too, have been raised that its approach has been highly subjective. Deserving persons have been ignored wholly for subjective reasons, social and other national realities were overlooked, certain appointments were purposely delayed so as either to benefit vested choices or to deny such benefits to the less patronised, selection of patronised or favoured persons were made in blatant violation of the guidelines resulting in unmerited, if not, bad appointments.
“The dictatorial attitude of the collegium seriously affecting the self-respect and dignity, if not, independence of judges, the court, particularly the Supreme Court, often being styled as the court of the collegium, the looking forward syndrome affecting impartial assessment, etc., have been some of the other allegations in the air for quite some time. These allegations certainly call for a deep introspection as to whether the institutional trusteeship has kept upto the expectations of the framers of the Constitution.”
As reported in the press, Fali Nariman, the doyen of the Indian bar, said, “In Dinakaran’s case, I must say something. Very eminent people from Chennai wanted to say something about Dinakaran to the then CJI ( K.G. Balakrishnan ). Neither the CJI nor any of the members of the collegium agreed to meet them.. We were all hounded out. ”
Ad hoc, and prone to abuse
In this connection I may mention something in my personal knowledge.
When I came to know that the collegium was considering Dinakaran for elevation to the Supreme Court, I went to the chamber of Justice Kapadia, who was then a member of the collegium during a lunch interval and told him in great detail that when I was Chief Justice of Madras High Court, there were very serious allegations against Dinakaran (about alleged land grabs, etc ). I told Justice Kapadia that he was a member of the collegium while I was not, but that I had a duty to inform him about the facts, and now it was up to him to do what he wanted.
Despite my informing Kapadia, the collegium, headed by K.G. Balakrishnan went ahead and recommended Dinakaran for elevation to the Supreme Court, and it was just in the nick of time that the appointment was stalled because of the massive documentary evidence against Dinakaran produced by the Tamil Nadu lawyers, and impeachment proceedings against him by Parliament later.
Later, I reminded Kapadia that I had informed him of all the facts and said that if he had informed the collegium of what I had told him (which evidently he did not) the Supreme Court could have avoided the embarrassment the matter caused. Kapadia admitted that I had indeed informed him, but he could not do anything about it since the CJI (Balakrishnan) was pushing for Dinakaran’s elevation. But surely Kapadia could have informed the collegium of what I told him, and could have asked the collegium to invite me to present my views, which he evidently did not.
I may mention about another undeserving appointment made to the Supreme Court on the recommendation of the collegium. There was a judge originally from Kerala. He was transferred to four high courts, and everywhere he would hardly work, and left about 300-400 judgments undelivered in each place at the time of his transfer. When there was a move to bring him to the Supreme Court, a retired Supreme Court judge, also from Kerala, telephoned the then CJI Balakrishnan and asked why such an undeserving judge was being elevated. Justice Balakrishnan replied that there was no judge from his ‘community’ in the Supreme Court, and so one had to be appointed. Was this a valid reason for such appointment? And why did the other members of the collegium not object?
Even in the Supreme Court he hardly worked, and left many undelivered judgments on his retirement.
There was a further matter that I am privy to. A very senior judge in the Supreme Court, who later became CJI, wanted to get his sibling appointed judge of the Calcutta High Court. He reportedly told the Chief Justice of the Calcutta High Court to recommend the sibling’s name, although the person was then almost 60 years of age (a high court judge retires at 62) and had hardly any practice. This was strongly objected to in writing by the judge next in seniority to the Chief Justice of the High Court, a judge known to be upright and learned. This so annoyed the Supreme Court judge that he never allowed the Calcutta high court judge to come to the Supreme Court. Consequently, the conscientious judge retired as a chief justice of a high court, while the Chief Justice of Calcutta High Court was duly rewarded for recommending the name of the sibling of the Supreme Court judge by himself being elevated to the Supreme Court.
I can mention several other instances of recommendations of undeserving persons made by the collegium, most of whom were subsequently appointed, causing great harm to the judiciary.
My opinion is that to ensure transparency, accountability and objectivity, meetings and discussions in the collegium should be video recorded, archived and televised. After all, the people are supreme in a democracy, and the people have a right to know what transpires in the collegium meetings, because ultimately it is they who would be affected if a wrong appointment is made.
In the United States, persons being considered for elevation to the US Supreme Court have to appear before the Senate, where they are questioned by the members not only about their judicial views and performance but also about their personal life, and these proceedings are televised. In my opinion, the persons being considered should be asked to appear before the collegium, and questioned by its members in televised proceedings, so that there is public transparency both about what the collegium is looking for in a judge and what the judge herself or himself has to offer.

3 comments:

  1. அடப்பாவிகளே நீங்கள்லாம் நீதிமான்களா?

    ReplyDelete
  2. எந்த காலத்தில் இருக்கிறோம் நாம்....அய்யோ.....

    ReplyDelete
  3. நீதிக்கே நீதி தேவைப்படுகிறதே!

    ReplyDelete