எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட நிவாரண உதவிகள் பற்றி நேற்று
பதிவிட்டிருந்தேன். பாதிப்பின் தீவிரம் அறிந்து கொள்ள இந்த படங்கள் உதவும்.
பத்து உயிர்களை பலி கொண்ட பெரிய காட்டுப்பாளையம்
இன்னும் லேபிள் பிரிக்காத புது வேட்டிகள், புடவைகள். தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்தார்கள் போல. ஆனால் அதை உடுத்த அவர்கள் உயிரோடு இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை !
இப்போது சாந்தமாக தோன்றும் ஒடை அன்று ஆக்ரோஷமாக ஏன் பாய்ந்ததோ?
மண்மேடால் மூடப் பட்ட பொதுக் கழிப்பிடம்
பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல புதைந்து கிடக்கும் வீடு, இடிந்து போன இன்னும் ஒரு வீடு, விசூர் என்ற ஊரில்
தகரமே பாலங்களாக எல்லப்பன் பேட்டையில்
நிரம்பி வழியும் தண்ணீர், தகர்ந்து போன குடிசைகள், கல்குணத்தில்
அழுகி நிற்கும் பயிர்கள்
பரிதாமாயிருக்கிறது.... படங்களும் நிலையும்...
ReplyDeleteகொடூர தாண்டவம் ஆடிவிட்டிருக்கிறது மழையும் புயலும்!
ReplyDelete