Monday, September 28, 2015

இந்த சாமியார் மேல சந்தேகம் வருதே…..





 
மறைந்த குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் எழுதிய “ப்ரமுக் ஸ்வாமிகளுடனான எனது ஆன்மீக அனுபவங்கள்” என்ற புத்தகத்தை ஸ்ரீதேவி கர்த்தா என்பவர் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதனை வெளியிட கரண்ட் புக்ஸ் என்ற பதிப்பகம் திருச்சூரில் விழா ஏற்பாடு செய்துள்ளது. எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிட ப்ரமுக் ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பிரம்மவிஹாரிதாஸ் என்ற சாமியார் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக திட்டமிடப் பட்டுள்ளது.

மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்த ஸ்ரீதேவி கர்த்தாவை விழாவுக்கு அந்த பதிப்பகம் அழைக்கவில்லை.

அதன் காரணம் என்ன தெரியுமா?

பிரம்மவிஹாரிதாஸ் சாமியார் இருக்கும் மேடையில் பெண்களே இருக்கக் கூடாதாம். அது மட்டுமல்ல, முதல் மூன்று வரிசைகளிலும் பெண்களே உட்காரக் கூடாதாம்.

ஆகவே மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் கூட அவர் பெண்ணாக இருப்பதால் விழாவிற்கு வருவதற்கு தடை போட்டு விட்டார்கள். அவர் தன் வேதனையை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட பிரச்சினை துவங்கியது.

பல்வேறு மாதர் அமைப்புக்கள், கலாச்சார அமைப்புக்கள், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் தலையிட்டன. பதிப்பகத்தைக் கண்டித்து விழா அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தின. சாமியார் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. விழா ரத்தாகி விட்டது.

இவர் இருக்கும் மேடையில் பெண்கள் இருக்கக் கூடாது. முதல் வரிசைகளில் பெண்களே இருக்கக் கூடாது என்றெல்லாம் லா போட்டு பெண்களை இழிவு படுத்தும் இந்த சாமியாரின் தாயும் ஒரு பெண்ணாகத்தானே இருக்க முடியும்? இல்லை இவர் சுயம்புவாக தோன்றிய அபூர்வப் பிறவியா இல்லை க்ளோனிங் முறையில் செய்யப்பட்டவரா இல்லை எந்திரன் சிட்டி போல ரோபாவா?

சாமியார்கள் ஒன்று நித்யான்ந்தா, பிரேமான்ந்தா, ஆசாராம் பாபு போல பெண்களை பாலியல் கொடுமை செய்து இழிவு படுத்துகிறார்கள். இல்லையென்றால் அவர்களை மனிதப் பிறவியாகவே மதிக்க மாட்டார்கள்.

எனக்கு இன்னொரு சந்தேகமும் வருகிறது.

நம் தமிழ் திரைப்படங்களில் தீவிர பிரம்மச்சாரிய விரதம் கடைபிடிப்பவர்கள் எல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சாமியார் எப்படியோ?

என்றைக்காவது ஒரு நாள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாமலா இருக்கப் போகிறது!

அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம்.

4 comments:

  1. நிச்சயமாக ஒரு நாள் வண்டவாளம் தண்டவாறம் ஏறும் நண்பரே

    ReplyDelete
  2. pala naal thirudan oru naal mattaamala iruppan.






    ReplyDelete
  3. சாமியார் என்றாலே போலி தான். அப்புறம் என்ன போலிச்சாமியார்? அந்த சாமியார் மூஞ்சியை பார்த்தாலே அவன் ஒரு தெரிந்தெடுத்த டகால்டி என்று!

    ReplyDelete
  4. சாமி சம்பந்தபட்ட எல்லாமே பெரும் பிரச்சனைகளாக உள்ளன.பக்தர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete