Friday, September 25, 2015

ஹஜ் பலி - முதல் முறைதான் விபத்து. தொடர்ந்தால் அது ………



நேற்றைக்கு சவுதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு நிகழ்ந்தது கொடுமையான ஒன்று. ஹஜ் பயணத்தில் மினா என்ற இடத்தில் சாத்தான் மீது கல்லெறிவது என்ற சடங்கின் போது ஏற்பட்ட நெரிசலில் எழுநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்து போயுள்ளனர்.
           
இந்த இடத்தில் நெரிசல் ஏற்படுவதோ, பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இறந்து போவதோ முதல் முறையல்ல. 1991 ம் ஆண்டு இதே இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். அப்போது அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதற்கு பிறகு பார்த்தால் அதே இடத்தில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பது தொடர்கதையாகி விட்டது. முதல் முறை விபத்து நடந்த போதே சவுதி அரேபிய அரசு விழித்துக் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தொடர் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவிற்கு சவுதி அரேபிய அரசு ஒன்றும் பஞ்சப் பரதேசி அரசு கிடையாது. செல்வச் செழிப்பு மிக்க அரசுதான். மேலும் ஹஜ் பயணத்தின் மூலமும் அரசுக்கு நிதி வந்து கொட்டுகிறது.

அப்படி இருக்கையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தனது நாட்டிற்கு வரும் பக்தர்களின் உயிரோடு விளையாடுவது, அவர்கள் உயிரை துச்சமென மதிப்பது சவுதி அரேபிய அரசின் அலட்சியம் என்று சொல்வது கூட தவறு. அராஜகம் என்பதே பொருத்தமான வார்த்தையாக இருக்கும்.

ஹஜ் பயணத்தின் போது மெக்காவில் இறப்பவர்கள் நேரடியாக அல்லாவிடம் செல்கின்றார்கள் என்றொரு வாதத்தை சில தினங்கள் முன்பு நடந்த விபத்தின் போது சிலர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறில்லை.

இப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் சவுதி அரேபிய அரசின் அராஜகம் தொடர்வதற்கே வழி வகுக்கும், மேலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் எதிர்காலத்தில் நெரிசலில் சிக்கி இறப்பதற்கும் கூட.

11 comments:

  1. காரைக்கால் உவைஸ்September 26, 2015 at 2:16 PM

    இதை இஸ்லாமிய மக்களாகிய நாங்கள் அல்லாஹ் வின் நாட்டமாகவே கருதுகின்றோம் . அல்லாஹ் வின் நாட்டத்தை படியே உயிரிழப்பு நடந்தது . இறந்தவர்கள் தெருவில் இறக்கவில்லை அல்லாஹ்வின் வீட்டில் இறந்திருக்கின்றார்கள் .. அவர்களுக்கு சுவனம் நிச்சயம் .
    இதை வைத்து சவுதியை விமர்சனம் செய்யும் மட்டமான கீழ்த்தரமான போக்கை நிறுத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. //அல்லாஹ் வின் நாட்டத்தை படியே உயிரிழப்பு நடந்தது . இறந்தவர்கள் தெருவில் இறக்கவில்லை அல்லாஹ்வின் வீட்டில் இறந்திருக்கின்றார்கள் .. அவர்களுக்கு சுவனம் நிச்சயம் .
      இதை வைத்து சவுதியை விமர்சனம் செய்யும் மட்டமான கீழ்த்தரமான போக்கை நிறுத்த வேண்டும் //
      உயிர்தப்பிய பக்தர்கள் அளித்த பேட்டிகளில் இருந்து அறியகிடைக்கும் ஆதாரங்களின்படி மூச்சு எடுத்து மூச்சு விடுவதற்காக பக்தர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி தாங்கள் உயிரை காப்பாற்றி உலகத்தில் உயிர்வாழ போராடியிருக்கிறார்கள் என்பதே, தவிர சுவனம் செல்வதிற்காக அல்லாஹ்வின் வீட்டில் இறக்க பக்தர்கள் தாயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.
      சாத்தானுக்கு கல்லெறிவது இந்த மனித அழிவு நடந்த பின்பு வெள்ளிக்கிழமை சனிகிழமையும் நடைபெறுகிறது அங்கே செல்ல நாம் பயப் படுகிறோம் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

      Delete
  2. // ஹஜ் பயணத்தின் போது மெக்காவில் இறப்பவர்கள் நேரடியாக அல்லாவிடம் செல்கின்றார்கள் என்றொரு வாதத்தை சில தினங்கள் முன்பு நடந்த விபத்தின் போது சிலர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறில்லை.

    இப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் சவுதி அரேபிய அரசின் அராஜகம் தொடர்வதற்கே வழி வகுக்கும், மேலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் எதிர்காலத்தில் நெரிசலில் சிக்கி இறப்பதற்கும் கூட.//

    ஒரு அரசாங்கத்தின் தவறைக்கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மதம் அறிவுக் கண்களை மூடுகிறது. தன்னை வழிபட வந்தவர்களுக்கு ஒரு கொடூர மரணத்தைக் கொடுப்பதுதான் கடவுளின் நாட்டம் என்றால் ??????????

    பரிதாபப்படுகிறேன்

    ReplyDelete
  3. இனியாவது இது தொடராமல் இருக்க அந்நாட்டு அரசு வழி செய்ய வேண்டும் என்ற தங்கள் கருத்து சரியே

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட மூட நம்பிக்க கொண்ட மக்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் அல்லா பெயராலோ அல்லது கடவுள் பெயராலோ மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்.

    ReplyDelete
  5. பக்தர்களிடமிருந்து வருமானத்தை அள்ளி குவிக்கும் புனித சவூதிக்கு அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அக்கறை கிடையாது, கண்டித்த மார்க்ஸிய பதிவருக்கு பாராட்டுக்கள்.
    இந்த சவூதிஅரேபியா தான் மதவாதிகளால் சிரியாவில் துன்பபட்டு வெளியேறி கொண்டிருக்கும் அகதிகளை நாங்க ஏற்க மாட்டோம், அவர்களால் எமக்கு பிரச்சனைகள் ஏற்படும், ஆனால் அவர்களை ஏற்று கொள்ளும் நாடான ஜெர்மனியில் சிரியா அகதிகள் அல்லாஹ்வை வணங்குவதற்கு 200 mosques அமைத்து கொடுத்து உதவி செய்ய தாயாராயிருக்கோம் என்று அறிவித்த அப்படி ஒரு நல்லெண்ணம், இந்தியாவில் சொல்வார்களே மத நல்லிணக்கம் கொண்ட ஒரு நாடு தான் சவூதிஅரேபியா.

    ReplyDelete
  6. கீழ்கண்ட இணைப்புகளை காணுங்கள் - சவூதி அரசு செய்யும் ஏற்பாடுகளை பற்றி அறிய

    http://www.vkalathur.in/2015/09/blog-post_71.html
    http://www.vkalathur.in/2015/09/blog-post_651.html

    ReplyDelete
  7. சவூதி அரசு நிறைய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெரிய கூட்டத்தில், டொமினோ எஃபெக்ட் போல, சிறிய நெரிசல், பலபேர் மறைவுக்குக் காரணமாகிவிட்டது. அரசின் ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. 2 கோடிப் பேர் (பல நாட்டு மக்கள்), 6 நாள் அவகாசத்தில் என்பது எவ்வளவு பிரம்மாண்டம்.

    ReplyDelete