Tuesday, September 1, 2015

முதல்வரானால்தானே முதல் கையெழுத்து ?





மாற்றம், முன்னேற்றம் என்ற காபி, பேஸ்ட் போஸ்டருக்கு அடுத்த படியாக “முதல் கையெழுத்து, பூரண மது விலக்கு” என்ற அடுத்த போஸ்டரையும் சின்ன மருத்துவரய்யா படத்தோடு வெளியிட்டு விட்டார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு அநியாய புத்திசாலித்தனம்!

முதலமைச்சர் ஆனாத்தான் முதல் கையெழுத்து போட முடியும். அதுக்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிந்ததால்தான் தைரியமாக வாக்குறுதியை அள்ளி வீச முடிகிறது.

தன்னுடைய ஜாதிக்காரர்களைத் தவிர வேறு யாரும் வாழ்ந்து விடவே கூடாது, தலை நிமிரக் கூடாது என்ற வெறியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி பாமக. அதனால்தான் அது செல்வாக்கை இழந்து விட்டது. அந்த கட்சியின் துவக்க கால தலைவர்கள் எவ்வளவோ பேர் அக்கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள்.

இழந்து போன செல்வாக்கை மீட்க அதற்கு தெரிந்த ஒரே வழி ஜாதிய உணர்வுகளைத் தூண்டி கலவரங்களில் ஈடுபடுவதுதான். இளவரசன் –திவ்யா திருமணத்தை முன்வைத்து திவ்யாவின் தந்தையின் சடலத்தை மூலதனமாக்கி தர்மபுரியில் மூன்று கிராமங்களை எரித்தார்கள். எரிந்து போன குடிசைகளின் சாம்பலைப் பூசிக் கொண்டு தர்மபுரியில் ஓட்டு வேட்டையாடினார்கள்.

கணவனின் மரணம், மகள் திவ்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியானது ஆகியவற்றின் சுவடே தெரியாமல் திவ்யாவின் தாய் சிரித்துக் கொண்டே அன்பு மணிக்கு ஆரத்தி எடுத்த புகைப்படத்தை பார்த்த போது தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்த இளவரசனின் புகைப்படத்தை பார்த்த போது கிடைத்த வலியை விட கூடுதல் வேதனையாக இருந்தது.

ஆனால் ஜாதிய வெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்ற தமிழகம் முழுவதும் தர்மபுரி அல்ல. இவர் ஜாதிக்காரர்கள் அனைவரும் இவரது கட்சியை ஆதரிக்கவில்லை என்பதும் தமிழகம் முழுதும் இவர் ஜாதி இல்லை என்பதும் ஒரு ஆறுதல்.  பாமக வோடு கூட்டணி வைக்கவே மற்ற கட்சிகள் தயங்கும் போது இவர் பாட்டிற்கு சுவரொட்டிகளாக அச்சடித்துக் கொண்டிருப்பது வெறும் காமெடி மட்டுமே.

8 comments:

  1. மிக அருமையான பதிவு.
    திவ்யாவின் அம்மா சிரித்துக் கொண்டே அன்பு மணிக்கு ஆரத்தி எடுத்தாரா! என்ன கொடுமை இது. இப்போ தான் முதல் தடவை இந்த தகவலை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற கதைதான். மத்தியில் மத வெறியர்களின் ஆட்சி. மாநிலத்தில் இந்த ஜாதி வெறியர்கள் ஆட்சியை பிடித்து விட்டால் அவ்வளவுதான். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போவாராம்.
    இவருடைய கையெழுத்து யாருக்கு தேவை ?

    ReplyDelete
  4. everybody has a right to dream. but this man's dream can only be a dream.

    ReplyDelete
  5. நாடு மிக வேகமாக தவறான வழியில் போகிறது. பல மத எதிர்பாளர்கள் கொல்லபடுகின்றனர்.
    ஜாதியை போற்றி வளர்கின்றனர். ஐ எஸ் ஐ எஸ் இங்கு பரவி விட்டால், சாதாரண மக்கள் வாழவே வழி இல்லாமல் சிரமம் ஆகலாம்.

    ReplyDelete
  6. மத, ஜாதி வெறியர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். அவ்வப்போது இத்தகையவர்களின் முகமூடிகளைக் கிழிப்பதற்குத் தயங்காதீர்கள். "திவ்யாவின் அம்மா' வைச் சொல்லிக் குற்றமில்லை. அவர், அவரின் சமூகத்தின் மத்தியில்தான் வாழ்ந்தாக வேண்டும். அவருக்கும் திவ்யாவிற்கும் உள்ளக் குமுறல் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றி யாருக்கு அக்கறை. இதுல வேற, பசுத்தோல் போர்த்திக்கொண்டு மற்ற இடங்களுக்கும் அன்புமணி செல்ல ஆரம்பித்துவிட்டார்.

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு

    ReplyDelete