Sunday, September 20, 2015

வெற்றிகரமான "அல்வா" சோதனை

ஒரு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமையல் முயற்சி.



கடந்த முறை அலைபேசியில் பேசி, அதனால் சொதப்பி பிறகு சமாளித்த அனுபவம்   உங்களுக்கு தெரியுமல்லவா! அதனால் இன்று அலைபேசிகளை அணைத்து விட்டுத்தான் சமையலறைக்குள் சென்றேன் என்பது மிக முக்கியமான விஷயம். 

ஒரு புதிய பண்டத்தை   முயற்சி  செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான பொருட்கள் கிடைக்காததால் கேரட் அல்வா அல்லது   பீட்ரூட்  அல்வா செய்து பார்ப்போம் என்று நினைத்தேன். பையனின் சாய்ஸ் கேரட் அல்வா என்பதால் அதையே செய்ய முயற்சித்தேன்.

அல்வா செய்ய நினைத்தால் கேக் வரும், கேக்கிற்கான முயற்சி அல்வாக முடியும். அந்த பதட்டம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க தொடங்கியது கேரட் அல்வா சோதனை.

ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி குறிப்பு கொடுத்திருந்தார்கள். அளவுகளும் ஆளுக்கு ஆள் மாறியிருந்தது. நான் முயற்சி செய்த அளவு கீழே.

கேரட் அரை கிலோ, காய்ச்சிய பால் கால் லிட்டர், சர்க்கரை 300 கிராம்.


கேரட்டை முதலில் துறுவிக் கொண்டேன். முந்திரி, திராட்சையை வறுத்து வைத்துக் கொண்டேன். பிறகு  குக்கரில் கேரட்டை பாலில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்தால் போதும்.



பிற்கு இந்த கலவையோடு சர்க்கரை சேர்த்து கிளறவும், கிளறவும், கிளறிக் கொண்டே இருக்கவும்.  பால், சர்க்கரை எல்லாம் கலந்து கெட்டியாகும் போது ஒரு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். பிறகு ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சையெல்லாம் சேர்த்து கிளறி  அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.







கேரட் அல்வா, அல்வா வடிவத்திலேயே வந்ததும் சுவை சூப்பர் என்று மகன் சொன்னதும் நிறைவு.  அளவுதான் போதுமானதாக இல்லை. என்ன செய்வது இந்த கேரட்டை தோல் சீவி துறுவதற்குள்ளாகவே கை வலி வந்து விட்டது.

 

3 comments:

  1. அல்வா சோதனை வெற்றி அடைந்தது எனக்கும் மகிழ்ச்சி. பீட்ரூட்டில் ஒரு வித இனிப்பு சுவையிருப்பதால் கேரட் தான் அல்வாவுக்கு நல்ல தெரிவு என்பது தான் எனது கருத்தும்.
    செய்முறையை விளக்கமாக எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete