எங்களது தோழர் ஒருவர் வேலூர் நூலகத்திலிருந்தது இந்த புத்தகம் என்று சொல்லி என்னிடம் காண்பித்தார். ஆஹா, அருமையான ஒரு நூல் என்று ஆவலோடு வாங்கிக் கொண்டேன். நான் ஒப்படைக்க வேண்டிய நாள் முடிந்து விட்டது என்றவரை வலியுறுத்தி மீண்டும் எடுத்துக் கொண்டு வரச் சொன்னேன். நேற்று மதியம் அலுவலகம் விட்டு வீடு வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு சில பக்கங்களை கடந்ததுமே ஆர்வம் கொஞ்சம் வடிய ஆரம்பித்தது. ஆனாலும் விடாமல் படித்து முடித்து விட்டேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய ஏராளமான தகவல்கள், அவரைப் பற்றி பல்வேறு பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டவை என்று பல விஷயங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்த நூலில் ஏதோ ஒரு குறை இருக்கிறது.
அது தொகுக்கப்பட்ட விதத்தில் உள்ள குறைபாடாக எனக்கு தோன்றுகிறது. நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, முக்கிய சம்பவங்கள் என்ற முறையில் ஒரு கால வரிசையில் தொகுத்திருந்தால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
மாறாக அவ்வப்போது கிடைத்த தகவல்களை அங்கங்கே ஒட்டி வெட்டி எழுதப்பட்டதாக இருப்பதால் ஒரு வரலாறு என்ற முறையில் இந்த நூல் அமையவில்லை. வாசிப்பு சுகம் என்பது கொஞ்சமும் கிடைக்கவில்லை.
பல நல்ல புகைப்படங்கள் நூலெங்கிலும் உள்ளது என்பது ஒரு நல்ல அம்சம்.
இதே விஷயங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கைவசம் சென்றிருந்தால் ஒரு மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்குமே என்ற ஏக்கத்தை அளித்தது இந்த நூல்.
எதிர்பார்ப்பு இருந்ததால் ஏமாற்றம் பெரிதாக இருக்கிறது.
பின் குறிப்பு : நடிகர் திலகம் நடித்த 288 திரைப்படங்களில் பட்டியலும் இந்த நூலில் இருக்கிறது. அதிலே 153 திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன், தியேட்டரில்.
உண்மைதான் நண்பரே
ReplyDeleteஎழுத்துக்கள் படிப்பவரை ஈர்க்க வேண்டும்
நன்றி