Wednesday, September 23, 2015

அறிவுரை அல்ல, ஆபாசம் மட்டுமே




குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படக் கட்டுரை கடுமையான கண்டனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் மீதான அக்கறையோடு எழுதப் பட்டுள்ளதான தோற்றத்தை தர முயற்சித்தாலும் அக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல என்பதை கட்டுரையைப் படிக்கும்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

லெக்கின்ஸ் உடை  அணிந்த பெண்கள் பற்றிய வர்ணனையே ஆபாசமாகத்தான் இருக்கிறது.  உண்மையிலேயே பெண்களின் உடல் நலன் குறித்த அக்கறை என்றால் மருத்துவரின் பேட்டியோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே.

பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் ஆடைகள்தான் காரணம் என்று அவர்கள் மீதே பழிபோடும் உளுத்துப் போன வாதத்தை மீண்டும் நிறுவுவதற்கான முயற்சிதான் இது.  அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வாரமும் இவர்கள் வெளியிடுகிற கவர்ச்சிப் படங்கள் என்ன ஆண்களை திருத்தி நல்வழிப் படுத்துவதற்கா?

பெண்களை ரகசியமாக ஒளிந்திருந்து எடுத்த படங்களைத்தான் இவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதுவே தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். அப்படிப்பட்ட படங்களை வெளியிட்டு விற்பனையைப் பெருக்குகிற கீழ்த்தரமான விளம்பர உத்தியைத் தவிர வேறெதுவும் இல்லை.

எத்தனையோ புலனாய்வு பத்திரிக்கைகள் ஊழல் விவகாரங்களை ரகசியமாக படம் எடுத்து வெளியிடுகின்றன. இவர்களின் தரம் இவ்வளவுதான். 

வெட்கம் கெட்ட செயல்.

 

4 comments:

  1. வேதனையாக இருக்கிறது நண்பரே

    ReplyDelete
  2. எதையும் வியாபாரமாக்கும் கூட்டம்!

    அந்தப் படத்தை உங்கள் வலைப் பக்கத்தில் பகிராத நேர்மைக்கு நன்றி!

    ReplyDelete
  3. //பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் ஆடைகள்தான் காரணம் என்று அவர்கள் மீதே பழிபோடும் உளுத்துப் போன வாதத்தை மீண்டும் நிறுவுவதற்கான முயற்சிதான் இது.//
    அதே தான். வேதாளங்கள் மறுபடியும் முயற்சிக்கின்றன.

    ReplyDelete
  4. இது நிருபர்கள் எடுத்த புகைப்படமாக இருக்காது. இணையத்தில் ஆபாச வலைத்தளங்களில் இருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

    ReplyDelete