Saturday, September 19, 2015

ஏ.ஆர்.ரஹ்மானின் துணிச்சல் ஏன் ரஜனிக்கு????????



உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு இசையமைப்பாளராக திரு ஏ.ஆர்.ரஹ்மான் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. நான் ஒரு மிகப் பெரிய இளையராஜா வெறியன் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல, தைரியமான மனிதராக இன்று ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டுக்களை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

தன் மீது விதிக்கப்பட்ட ஃப்ட்வா எனும் அபத்ததிற்கு எதிராக அவர் அளித்துள்ள மறுப்பறிக்கை உண்மையிலேயே அற்புதமாக உள்ளது.  அனைத்து மதங்களும் போதிப்பது அன்பையே என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லியுள்ளார். 



இந்தியாவின் சிறப்பு என்ன என்பதை அவருக்கு ஃபட்வா  விதித்த அமைப்பிற்கும் பாடம் எடுத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ரஹ்மானுக்கு இருக்கிற தைரியம் ஏன் ரஜனிகாந்திற்கு இல்லை என்ற ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது.

கபாலி திரைப்படம் தொடங்குவதால் வழக்கமான வணிக உத்தியாக இந்த சர்ச்சையையும் ரஜனிகாந்த் பயன்படுத்திக் கொள்கிறாரே என்ற சந்தேகமும் இணைந்தே வருகின்றது. 

 

 

5 comments:

  1. வணக்கம் திரு எஸ் ராமன், மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில படிவத்தின் தமிழ் வடிவத்தை தாங்கள் அளித்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவரும் படிக்க முடியும். நன்றி சுரேந்திரன் குண்டூர்

    ReplyDelete
  2. வணக்கம் திரு எஸ் ராமன், மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில படிவத்தின் தமிழ் வடிவத்தை தாங்கள் அளித்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவரும் படிக்க முடியும். நன்றி சுரேந்திரன் குண்டூர்

    ReplyDelete
  3. ரஜினி அதிக மதபற்று உள்ளவர் மேலும் வளர்ந்து வரும் ஒரு முதலாளி

    ReplyDelete
  4. ரஹ்மான் உயர்ந்து நிற்கின்றார்!

    ReplyDelete
  5. மதவாதிகளை, அவர்களின் தீர்ப்பை எதிர்ப்பதற்கு இசையமைப்பாளருக்கு துணிவை கொடுக்க பக்க பலமாக இருந்தது இந்திய ஜனநாயக கட்டமைப்பு.
    அனைத்து மதங்களும் அன்பையே சொல்கின்றன என்பது பலர் சொல்லும் சம்பிரதாய ஒரு வசனம். ஒரு மத நல்லிணக்கத்தை எற்படுத்தும் என்பதிற்காக சொல்லபடுவதை தவிர அது உண்மையில்லை.

    ReplyDelete