நேற்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்ட போது விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்,
மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கொடும்பாவியை
அதிமுககாரர்கள் எரிக்கும் போது அதற்கு ராஜ மரியாதையோடு பாதுகாப்பு அளிக்கிற
காவல்துறை மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்பாளி மக்கள் போராடும்போது மட்டும் தனது
அதிகாரத்தை பிரயோகித்து அந்த போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது.
கீழேயுள்ள படங்கள் நேற்று சிதம்பரத்தில்
நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை. ஆளும் கட்சிக்கு சலாம் போடுவதையே
மரபாகக் கொண்டுள்ள காவல் துறை எதிர்கட்சிகளாக இருந்தால் தனது குண்டாந்தடியைக்
கொண்டு தாக்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. செக்கிற்கும் சிவ லிங்கத்திற்கும்
வேறுபாடு தெரியாத காவல்துறை மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் கூட விட்டு
வைப்பதில்லை.
நேற்று நடந்த போராட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் சிதம்பரம் தொகுதி
சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர்
கே.பாலகிருஷ்ணன் அவர்களை தாக்கியுள்ளது காவல்துறை. அத்தாக்குதலில் அவருக்கு நெஞ்சு
வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்க்கும் போதே
காவல்துறை எவ்வளவு மோசமாக நடந்து கொண்டுள்ளது என்பது புரியும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை
என்றால் சாதாரண மக்களுக்கு?
காவல்துறை இந்த வீரத்தை திருடர்களையும் கொலைகாரர்களையும்
கண்டு பிடிப்பதிலும் நீதிமன்றங்களில் கோட்டை விடாமல் இருப்பதிலும் காண்பிக்கலாமே?
தமிழக, இந்திய குண்டாந்தடி போலீஸ் சாதாரண மனிதர்களை மதிப்பதே இல்லை.
ReplyDeleteSo What?
ReplyDelete