Thursday, July 23, 2015

இப்படி பேசிட்டயே தம்பி விஷால்!

படக்காட்சிகளை யூடியுபில் பார்த்து சிலிர்த்துப் போயிருந்தேன். 

அந்த மன நிறைவைக் கெடுக்கிற வகையில்  வாட்ஸப்பில் வந்து விழுந்தது ஒரு செய்தி. 

திரைப்பட நடிகர் விஷால் கூறியதாக வந்த செய்தியை கீழே பாருங்கள்.

"சிவாஜி கணேசன் இறந்து போகவில்லை. அவர் விஜய் உருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விஜய் நடிகர் திலகம் போல சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்"

இப்படி சொல்லிட்டியே தம்பி விஷால்?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

நீ சிவாஜி கணேசன் படமெல்லாம் பாத்திருக்கயா?

இல்லை விஜய் படங்களையாவது பாத்திருக்கயா?

அப்படி ரெண்டு பேர் படங்களயும் பாத்திருந்தா, இப்படி சொல்ல உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு? நடிகர் சங்க தேர்தலுக்காக இப்படி நடிகர் திலகத்தை போட்டுத் தள்ளுவியா?

கீழே இருக்கிற படங்களைப் பாரு. விஜயும் சரி நீயும் சரி முதல்ல நடிகர் திலகம் மாதிரி ஒப்பனை செஞ்சுக்கவாவது கத்துக்குங்க. நடிப்பெல்லாம் பிறகு பாத்துக்கலாம்.



கல்யாண் ஜ்வெல்லர்ஸ் விளம்பரத்துல விக்ரம் பிரபு அமிதாப் பச்சனைப் பாத்தா சிவாஜி தாத்தா ஞாபகம் வருதுன்னுதான் சொன்னார். அவரைப் போட்டு தாளிச்சு எடுத்த ஆட்களெல்லாம் இப்ப எங்க இருக்காங்கனு வேற தெரியல.

இன்னிக்கு ஒரு சீரியசான அரசியல் பதிவு  எழுத நினைச்ச என்னை இப்படி அரிவாளை தூக்க வைச்சுட்டாரே தம்பி விஷாலு!
 

4 comments:

  1. நல்ல வேளை நடிகர் திலகம் இன்று இல்லை

    ReplyDelete
  2. இதைவிட நடிகர்திலகத்தை யாரும் அவமானப்படுத்த முடியாது.............

    ReplyDelete
  3. காலக் கொடுமை. ஒருவேளை அவர், பிரபு & கோ வை எரிச்சல் படுத்தச் சொல்லியிருக்கலாமோ (ராதாரவி குரூப்)

    ReplyDelete
  4. சிவாஜி கணேசன் பற்றி அதிகம் தெரியாததால் விஷால் சொன்னபோ என்ன விஜய் மாதிரியா? என்பதை தவிர ஒன்றும் தோன்றவில்லை.
    மனிதர்களை, எம்மை எல்லாம் பயங்கரமா பயமுறுத்தி, கொலை வெறியோடு திரியும் தெருநாய்களை கொல்லாமல் பாதுகாக்க வேண்டி போராடும் விஷாலின் உண்ணா விரதம் கடுமையா கடுப்பை ஏற்படுத்தியது.
    நல்லா இந்தாளை போட்டு தாக்குங்க.

    ReplyDelete