மெல்லிசை மன்னரின் இசையில் பாடகிகள் ஜொலித்த சில பாடல்களை இன்று பார்ப்போம்.
நேற்றைய பதிவில் ஒரு முக்கியமான செய்தியை பதிவு செய்ய மறந்து விட்டேன்.
வாணிஸ்ரீ மற்றும் ஜெ பாடல்களை கொஞ்சம் பாருங்கள். அந்த இரு பாடல்களுக்காக பி.சுசீலா அவர்கள் தேசிய விருது பெற்றார்.
பி.சுசீலா அவர்களின் குரலில் இதுவும் ஒரு முக்கியமான பாடல்
எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் திரையிசையில் பாடிய பாடல்
எஸ்.ஜானகி அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்கையில் தூக்கம் நம் கண்களை தழுவும்.
எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் ஜெயப்ரதா ஆனந்தமாக மிதக்க கமல்தான் பாவம்.
மல்லிகையால் மன்னன் மயங்கினால் வாணி ஜெயராம் அவர்களின் குரலால் நாம் மயங்குவோம்
சின்னஞ்சிறு கிளியாக ஸ்வ்ர்ணலதாவை எம்.எஸ்.வி இசையுலகில் அறிமுகம் செய்த பாடல் இது.
கல்யாணி மேனன் பாடல்களை அதிகமாகக் கேட்டதில்லை. ஆனால் இந்தப் பாடல் மறக்க முடியாத ஒன்று.
நாளை இன்னொரு தொகுப்போடு சந்திக்கிறேன்.
நீங்க தந்த வீடியோ அனேகமானவற்றை பார்த்தேன் பழய கால fantasy உலகத்துக்குள் சென்று பார்த்தது போல் அருமையாக இருந்தது.
ReplyDelete// எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் ஜெயப்ரதா ஆனந்தமாக மிதக்க கமல்தான் பாவம்.//
எனக்கு கமலஹாசன் அணிந்திருக்கும் அந்த பேன்ட் பிடித்திருக்கிறது!