Tuesday, July 14, 2015

மெல்லிசை மன்னரின் குரலிலேயே அவருக்கு



இசையால் நம்மை ஈர்த்த எம்.எஸ்.வி யின் குரலில் அவருக்கு அஞ்சலி
 
தமிழ் திரையுலகத்தின் ஒரே சீனியரும் இன்று மறைந்து விட்டார். அவரது இசைதான் எனக்கெல்லாம் முதல் இசை. அவர் பாடல் கேட்டு இசையை ரசிக்கக் கற்றுக் கொண்டவன் நான்.

மெல்லிசை மன்னருக்கு அஞ்சலியாய் எந்த பாடலை பகிர்வது?
ஒரு நாளில் முடிகிற விஷயமா?
இந்த வாரம் முழுதுமே மெல்லிசை மன்னரின் வாரம்தான்.

இன்று அவரது குரலில் ஒலித்த சில பாடல்களை பார்ப்போம்.

ஒரு மசூதிக்குள் சென்று வந்த உணர்வை இந்த பாடல் தரும்.

சொல்லாமலேயே வாழ்க்கையை இழந்த வாலிபனின் பாடல்

சமூகத்தின் அவலத்தைச் சித்தரிக்கும் பாடல்

இன்றைய சோகம் நாளை மாறும் என்று நம்பிக்கை அளிக்கும் பாடல்

வாழ்க்கையின் பல்வேறு பயணங்களை சொல்லும் பாடல்

இந்திய ஒற்றுமையைச் சொல்லும் பாடலில் இவரது குரலும்  உண்டு.

வயதானாலும் குரலில் துள்ளல் குறையவில்லை என்பதை உணர்த்தும் பாடல்  இது.

சிரிப்பிலேயே ஏழு ஸ்வரங்களும் வந்து போகும் பாடல் .

மேற்கண்ட பாடல்கள் மெல்லிசை மன்னரே இசையமைத்தவை. எப்படி இசைஞானியோடு இணைந்து ஒரு படத்திற்கு இசையமைத்தாரோ அது போல மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடியுள்ளார்.

வி.குமார்  இசையில் பாடிய பாடல்   இது.

இளையராஜாவின் இசைக்கு பாடிய பாடல் பாடல் இது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடிய  பாடல் இது.

நாளை வேறொரு தொகுப்போடு மெல்லிசை மன்னரின் பாடல்களைக் கேட்போம்.



3 comments:

  1. மெல்லிசை மன்னரின் குரலிலேயே அவருக்கு = எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி சார் திரு S.Raman, Vellore

    ReplyDelete
  2. அஞ்சலிகள்.
    அவரின் பாடல் இணைப்புக்களுக்கு நன்றி.இவரின் சிறப்பை சொல்லி ஒரு பதிவு சமீபத்தில் எழுதினீர்கள்.

    ReplyDelete
  3. காற்றோடு கலந்த சங்கீதம்
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete