பாபனாசம் திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனம் பார்த்து விட்டு பதிவர் திரு நெல்லைத்தமிழன் எழுதிய பின்னூட்டம் கீழேயுள்ளது.
படம்
நன்றாக இருந்தது. நான் திருஷ்யம் பார்க்கவில்லை. முதல் 15-20 நிமிடங்கள்
படம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையே கணிக்க முடியவில்லை. ரொம்பப்
பாராட்டப்பட வேண்டிய விஷயம், கதைக்கு மரியாதை கொடுத்து எடுத்திருப்பது.
இதில் வேறு எந்த '.... ஸ்டார்' நடித்திருந்தாலும், அறிமுகக் காட்சி போன்று
பில்டப் கொடுத்து கதையைக் கந்தர்கோளமாக்கியிருப்பார்கள். நீங்கள்
சொன்னதுபோல் கௌதமி மட்டும் ஒட்டாமல் தெரிந்தது (ஓரிரு காட்சிகளைத்தவிர). //
எவ்வள்வு சரியாக இருக்கிறது இந்த கருத்து!
கமலுக்கு முன்பாக ரஜனிகாந்த் இந்த படத்தில் நடிக்க விருப்பப்பட்டு பிறகு பின் வாங்கியதாக செய்திகள் வந்திருந்ததை நினைத்துப் பார்த்தேன். அப்படியே நடுங்கிப் போய் விட்டேன்.
படம் தொடங்கும் போது புதிதாக மாற்றலில் சேரும் கான்ஸ்டபிள், கமலைப் பார்த்து திட்டுவதாகத்தான் தொடங்கும்.
அப்படி ஒரு கான்ஸ்டபிள் ரஜனியைப் பார்த்து திட்டுவதாகவா ரஜனிகாந்த் படம் தொடங்கும்?
ஏராளமான பில்ட் அப்களோடு ரஜனியை புகழோ புகழ்ந்து வைரமுத்து எழுதிய பாடலோடு ஆரம்பிக்காமல் ஒரு ரஜனி படமிருக்க முடியுமா?
அடுத்து கௌதமி மாதிரி நடுத்தர வயதானவரை ரஜனிக்கு இணையாக்க முடியுமா? ஏதாவது ஒரு சிறிய பெண்ணைத்தான் கதாநாயகியாக்க வேண்டும். அவர் பெண்ணுக்கு தங்கை மாதிரி இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
அதற்குப் பிறகு நெல்லைத் தமிழ். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
படம் முழுவதும் ரஜனிகாந்த் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு வர முடியுமா? செட்டிங்க்ஸ் இல்லாமல் வெளி நாட்டில் டூயட் இல்லாமல் என்னங்க ரஜனி படம்?
பஞ்ச் டயலாக் இல்லாமல் எப்படி? இரண்டு சண்டைக் காட்சியாவது இருக்க வேண்டாமா? ஸ்டைல் காண்பிக்க என்ன ஸ்கோப்?
ரஜனிகாந்தை பெண் போலீஸ் அதிகாரி மிரட்டினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? மாத்துங்க கதையை.
கலாபவன் மணியை நினைத்தால் கதி கலங்குகிறது. ரஜனியை (படத்தில்தான்) அப்படி அடித்து துவைத்து விட்டு அவரால் நிஜத்தில் நடமாட முடியுமா? அருணாச்சலம் படத்திற்குப் பிறகு வடிவுக்கரசி பட்ட அவஸ்தையை தமிழுலகம் கண்டிருக்கிறதே!
மோகன்லால் மாதிரி கமலஹாசன் நடிக்கவில்லை. கமலஹாசன்தான் தெரிந்தார், சுயம்புலிங்கம் தெரியவில்லை என்றெல்லாம் எழுதும் வாய்ப்பை எத்தனை விமர்சகர்கள் இழந்திருப்பார்கள்?
ரஜனிக்கு நன்றி சொல்லுங்கள். பாபனாசம் என்ற அருமையான திரைப்படம் வெளிவர அவர்தான் காரணம்.
பின் குறிப்பு :ரஜனிக்கு சொன்ன எல்லா விஷயமும் விஜய், அஜித் ஆகியோருக்குக் கூட பொருந்தும் என்பது இன்னொரு விஷயம்.
***படம் முழுவதும் ரஜனிகாந்த் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு வர முடியுமா? ***
ReplyDeleteநீங்க வேலூரா? எப்போ இருந்ந்து தமிழ்ப்படம் பார்க்குறீங்க? எஜமான், பதினாரு வயதினிலே (லுங்கி), எங்கேயோ கேட்டகுரல், முரட்டுக்காளை எல்லாம் நீங்க பார்க்கலை போல இருக்கு. சும்மா என்னத்தையாவது எழுத வேண்டியது!
படம் வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள "சக்ஸஸ்" மீட் கொண்டாடுறாரு! படம் ஒண்ணும் அப்படி எதுவும் பிச்சுக்கிட்டு ஓடவில்லை! பாகுபலி வேற் ரிலீஸ் ஆகி உள்ள கூட்டத்தையும் குறைக்கிது:)))
என்னை பொறுத்தவரையில் ரஜினி இந்தப் படத்தில் நடிக்காதது நல்லது. கொலையை மறைக்கிறது, சட்டவிரோதத்தை சரி என்பதெல்லாம் உங்களை மாரி ஆட்கள்தான் ரசிக்க முடியும். பொதுஜனம், நல்ல குடிமகன்கள் எல்லாம் ரசிக்க இயலாது. அதனால்தான் "யு" சான்றிதழ் பெற்றும் வரிவிலக்கு கொடுக்கவில்லை! இந்தப்படம், மலையாளிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் வேணா நல்லா இருக்கும், தமிழர்கள் மனநிலை (மாரல்ஸ்) கொஞ்சம் வேற மாதிரி. உங்களுக்கு இதெல்லாம் புரியாது. இப்படி 10 நாளில் "சக்ஸஸ் மீட்" எல்லாம் போட்டு வெற்றியடைய வைக்க வேண்டியதுதான். :)
Varun sir,
DeleteNaan C kappu manidhan padathula,
samuuuga sevai seidu Rajini sir "maraikira maadhiri"
"kanavu" kandeerkalaa,
idhula Rajini sir Nadichirundhaaa... wow "Kuselan"-i
thaaandi (theatarai vittu) OOdiyirukkum..
https://www.youtube.com/watch?v=Bdm5yNNuIlk
Padathoda KADHAI original yedhunu kela linkla
Parungaleen!!
appuram,
Paa(R)paan pathi pesalenna
soru yerangathu illey!!! appadi oru arippu !!!
kuripitta oru inathai patriya veruppuku
unga (Am)beri kavila "racism"nu solvanga illayaa!!
P.S: expect descent answers for this, thani manidha thakuthal illey sir.
thanks in advance for understanding.
Raman sir!!
indha padivukku naandirgal
Y.Anna.
வாங்க வருண், பாத்து ரொம்ப நாளாச்சு. நீங்கள் சொல்வது ரஜனிகாந்த் என்ற நடிகரைப் பற்றி. நான் பேசுவது சூப்பர் ஸ்டார் என்ற பிராண்ட் பற்றி.
ReplyDeleteமற்றபடி நகைச்சுவை பதிவிற்கேற்றால் போல நீங்களும் நகைச்சுவையாக நிறைய எழுதியிருக்கீங்க.
ரஜனிகாந்த் என்ற நடிகனை சூப்பர்ஸ்டார் என்ற பிம்பம் எப்படி விழுங்கி விட்டது என்ற எனது ஆதங்கத்தையும் இங்கே படியுங்கள் வருண்
ReplyDeletehttp://www.ramaniecuvellore.blogspot.in/2013/12/blog-post_8688.html
இந்த பதிவையும் அவசியம் படியுங்கள்
ReplyDeletehttp://www.ramaniecuvellore.blogspot.in/2015/04/blog-post_40.html
நாங்க எல்லாம் அபூர்வ ராகங்கள் காலத்திற்கு முன்பே படம் பார்க்க ஆரம்பித்தவர்கள்
***அதற்குப் பிறகு நெல்லைத் தமிழ். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.***
ReplyDeleteநீங்க ஏன் உங்க கற்பனைக் குதிரையை இஷ்டத்துக்கு பறக்க விடுறீங்கனு தெரியலை..
ராமன்: நெல்லைத்தமிழ் பேசித்தான் இந்தப் படம் எடுக்கணும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கன்னடிகா தமிழ்ப் பேசுவதுபோல் ஒரு குடும்ப சூழல்லயும் இந்தப் படத்தை எடுக்கலாம். அதைப் புரிஞ்சுக்கோங்க..
இவரு ஏதாவது நெல்லைத் தமிழ் மதுரைத் தமிழ் ராம்நாட் தமிழ், பரமக்குடித் தமிழ்னு தனக்கு மட்டும்தான் இதெல்லாம் செய்யத் தெரியும்னு பீத்துறதுக்காக ஏதாவது இப்படி செய்வாரு.. உடனே உஙகளை மாதிரி நெல்லை பார்க்காத வேலூர்க் காரங்க எல்லாம் "ஆஹா ஓஹோ"னு இவரு என்னத்தை கிழிச்சாலும் உலகத்தரம்னு சொல்லுவீங்க..:)))
ஏன் சார் ஒட்டு மொத்த வேலூர்க்காரங்களையும் வம்புக்கு இழுக்கறீங்க? அவங்க ரொம்ப நல்லவங்க. "லிங்கா" வையே ஒரு வாரம் தியேட்டர்ல ஓட வைச்சவங்க
ReplyDeleteAndha paavathukuu!!
Deleteungalukku vendiyathu thann
ha!haa!!haaah!! (rajini sir stylela sirekavum)
Y.Anna
ரஜனி தகவல்கள் சுவஸ்ரசியம்.
ReplyDeleteவிழுந்து விழுந்து சிரித்தேன்.
ReplyDeleteரொம்ப குசும்புங்க உங்களுக்கு
இவ்வளோ ஆவாது