“அப்துல் கலாமை கண்டறிய ஒரு வாஜ்பாய் தேவைப்பட்டார்”
இது சூப்பர் போலீஸ் அதிகாரி என்று வர்ணிக்கப்பட்டு அண்ணா ஹசாரே உடன்
இணைந்து ஊழல் எதிர்ப்பு போராளியாக மாறி பிறகு “வியாபம்” ஊழல் புகழ் பாஜக வில்
இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றுப் போன திருமதி கிரண் பேடி
டிவிட்டரில் பதிவு செய்துள்ள அபாரமான கண்டுபிடிப்பு.
வாஜ்பாய் பிரதமராகி அவர்தான் திரு அப்துல் கலாம் அவர்களை கண்டறிந்து
அவருக்கு அடையாளம் கொடுத்தாரா?
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்களையும் அக்னி ஏவுகணை சோதனைகளும் வாஜ்பாய்
பதிமூன்று நாள் பிரதமராவதற்கு முன்பே நிகழ்ந்தவை அல்லவா? இவற்றில் திரு அப்துல்
கலாம் அவர்களின் பங்களிப்பை இந்தியா முன்னரே அறியுமே!
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக திரு அப்துல்
கலாம் இருந்திருக்கிறாரே!
வாஜ்பாய் பிரதமராவதற்கு முன்பே பத்ம விபூஷன் வரை உள்ள அனைத்து பத்ம
விருதுகளும் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மத்தியரசால் தரப் பட்டுள்ளதே!
அப்படி இருக்கையில் திரு அப்துல்
கலாமை கண்டறிய ஒரு வாஜ்பாய் தேவைப்பட்டார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமான விஷயம்.
அதே நேரம் இன்னொரு உண்மையையும் நாம் மறந்திடக் கூடாது.
மோடியின் கோர வெறியாட்டத்தால் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டு
குஜராத் ரத்த பூமியான போது உலக அரங்கில் இந்தியாவின் பெயர் நாறிப் போனது. எந்த
முகத்தோடு நான் மற்ற நாடுகளுக்குச் செல்வேன் என்று வாஜ்பாய் புலம்பும் அளவிற்கு
நிலைமை இருந்தது.
அந்த நேரத்தில் தனது ஆட்சி மீது விழுந்த கறையை துடைப்பதற்கு ஒரு இஸ்லாமிய
முகம் வாஜ்பாய்க்கு தேவைப்பட்டது. திரு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக
முன்மொழியப் பட்டார்.
வாஜ்பாயின் அடையாளத்தை மாற்ற அவருக்குத்தான் திரு அப்துல் கலாம்
தேவைப்பட்டாரே தவிர கலாமிற்கு வாஜ்பாய் தேவைப்படவில்லை.
பாவம், கிரண் பேடி! திஹார் சிறையில் கைதிகளோடு மன்றாடிக் கொண்டிருந்ததால்
அவருக்கு பொது அறிவு விஷயங்களையோ இல்லை அரசியல் விஷயங்களையோ கற்றுக் கொள்ள
நேரமிருக்கவில்லை போலும்!. இப்போது சும்மாதானே இருக்கிறார். யாராவது பாஜக காரர்கள்
அவருக்கு உண்மையான பொது அறிவு விஷயங்களை கற்றுக் கொடுங்களேன்.
Neththiyadi super
ReplyDeleteM.Syed
Dubai
அடுத்தாக ஒபாமாவை காப்பாற ஒரு மோடி தேவைப்பட்டதுன்னு எழுதுவாங்களே என்ன சொல்வீங்க. அது எப்படி சொல்லி வைத்தார் போல் அனைத்து பாசகவினரும் உளருகிறார்கள்......
ReplyDeleteஆசை வெட்கம் அறியாது... இவர்களுக்கு அறிவும் இல்லை போலுள்ளது..
ReplyDelete2002 க்கு முன்பு எத்தனை பேருக்கு கலாமைத் தெரியும்?
ReplyDeleteஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்களையும் அக்னி ஏவுகணை சோதனைகளும் வாஜ்பாய் பதிமூன்று நாள் பிரதமராவதற்கு முன்பே நிகழ்ந்தவை அல்லவா?
அப்போது எத்தனை பேருக்கு கலாமைத் தெரியும்?
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக திரு அப்துல் கலாம் இருந்திருக்கிறாரே!
அப்போது எத்தனை பேருக்கு கலாமைத் தெரியும்?
2002 ல் ஜனாதிபதி ஆன் பின் தானே அவர் profile எல்லோருக்கும் தெரியும்
Kiran bedi' statement to be accepted
அப்படி தெரியவில்லையென்றால் அவர்களுக்கும் "பொது அறிவு" போதவில்லை என்றுதான் அர்த்தம். கிரண் பேடி போல நிறைய பேர் இருக்கிறார்கள் போலும், உங்களையும் சேர்த்து
Deleteplease send to gk book for us
ReplyDeleteMr Raman Sir, please see today's Dhinamalar paper
ReplyDeleteஆமா பொது அறிவு போதவில்லைதான் , உண்மையா பதில் சொல்லுங்கோ,உங்களுக்கு மதிபிற்குரிய திரு .கலாம் அவர்களை எப்போது இருந்து தெரியும் .உங்க Gk book பார்த்து சொல்லுங்கோ