ஆசாராம் பாபு சாமியாரை நினைவிருக்கிறதா?
ஆம், அவர்தான்.
டெல்லி நிர்பயா கொடூரத்தின் போது
“அந்தப்
பெண் சரஸ்வதி மந்திரத்தைச் சொல்லி தன்னை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்த
வந்தவர்களின் காலைப் பிடித்துக் கொண்டு சகோதரா என்று கெஞ்சி இருக்க வேண்டும்”
என்று சொன்னாரே, அதே சாமியார்தான்.
பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இப்போது சிறைக்
கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறாரே, அதே சாமியார்தான்.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ எப்படி ஊழல் லலித்
மோடிக்கு மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினாரா அது
போலவே “இவரைப் போன்ற புனிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா” என்று முன்பே
அவரது கருணையுள்ளம் தெரிய காரணமாக இருந்தாரே அதே சாமியார்தான்.
அவரும் அவரது மகனும் சிறையில் இருக்க, அவர் வழக்கில்
சாட்சிகளாக உள்ளவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தாக்குதல் என்றால்
ஆட்டோவில் வந்து குண்டாந்தடிகளால் அடிப்பது அல்ல. துப்பாக்கியால் சுடுவது.
இதில் கடைசி தாக்குதல் நிகழ்ந்தது சனிக்கிழமையன்று.
பத்து பேர் மீது நடந்த தாக்குதலில் இரண்டு பேர்
இறந்து விட்டனர். இருவர் நிலைமை கவலைக்கிடம். மற்றவர்கள் படுகாயம்.
சாமியார்கள் எப்படியெல்லாம் தர்மத்தை நிலை
நாட்டுகிறார்கள் பாருங்கள். எல்லாம் பாஜக “வியாபம்” ஊழலில் கற்றுக் கொடுத்த
பாடம்தான்.
எந்தக் கேஸுமே 3 மாதத்துக்குள் முடித்தாகவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், ஒருவேளை நியாயத்தை நிலைனாட்டலாம்.
ReplyDeleteஎப்போது, நாம், சாமியார்கள் (போலிச்) நமக்கும் கடவுளுக்கும் இடையே தரகர்கள் வேலை பார்ப்பதாகச் சொல்லிச் சுரண்டுகிறார்கள் என்று புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் இவர்கள் கொட்டம் அடங்கும்.
இதற்கெல்லாம் முதற் காரணம், அரசு, அறக்கட்டளைகளை அனுமதிப்பதுதான். எல்லா அறக்கட்டளைகளுக் அரசின் வசம் சென்றால் இப்படி ஒரு இடத்தில் பணம் குவிவது குறையும். எப்போது அளவுக்கு அதிகமாகப் பணம் இருக்கிறதோ, அங்கு எல்லாக் குற்றங்களும் நடக்கும்.
யோகா சொல்லித்தரும் (ஆ)சாமிகளுக்கு ஏசி மற்றும் கார் எதற்கு?