இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்திய முதல் சுதந்திரப் போரான வேலூர் சிப்பாய் புரட்சியின் இருநூற்றி ஒன்பதாவது ஆண்டை முன்னிட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சி நடத்தறாங்க.
அதில சாரல் கலைக்குழுவோட தப்பாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் உண்டு.
புதுகை பூபாளம் கலைக்குழு பாடப் போறாங்க.
திருவண்ணாமலை கருணாவும் சாத்தூர் லட்சுமணப் பெருமாளும் பேசப் போறாங்க.
சாயங்காலம் ஐந்தரை மணிக்கு அவசியமா வாங்க. சிரிங்க, ரசிங்க்,
சிந்திக்கவும் செய்யலாம்.
வேலூர்க்காரங்க மட்டுமல்ல பக்கத்துல இருக்கிற ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆரணி, கண்ணமங்கலம், கணியம்பாடி, குடியாத்தம் இவங்க எல்லாம் கூட கண்டிப்பா வாங்க.
No comments:
Post a Comment