மெல்லிசை மன்னருக்கான அஞ்சலியாய் இன்று பல முன்னணிக்
கதாநாயகர்களுக்கு அவர் உருவாக்கிய பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சோகமான மனநிலையை மாற்றக் கூடிய வல்லமை இசைக்கு
மட்டுமே உண்டு. எம்.எஸ்.வி எனும் மகத்தான கலைஞனின் மறைவு உருவாக்கிய துயரத்தை
மறைக்கும் வல்லமை அவரது பாடல்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் உற்சாகமளிக்கும்
பாடல்கள் இங்கே.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததில் திரையுலகத்தைச்
சேர்ந்த எண்ணற்றவர்களுக்கு ஒரு இடம் உண்டு. எம்.எஸ்.வி எம்.ஜி.ஆருக்கு அளித்த
பாடல்களில் பெரும்பாலானவை பலத்த வரவேற்பைப் பெற்றவை. இந்த படத்திற்காக ஏராளமான
ட்யூன்களை போட வைத்ததாக பல பேட்டிகளில் எம்.எஸ்.வி சொல்லியுள்ளார். உலகம் சுற்றும்
வாலிபனில் இருந்து உங்களுக்காக தங்கத் தோணியிலே
நடிகர் திலகத்திற்கும் அவர் இசைத்த பாடல்கள் ஏராளம்.
அதிலே மதன மாளிகைக்குச் சென்று வருவோம்.
ஜெமினி கணேசனுக்கு தமிழ்ப்படத்தில் அவர் இசைத்த
மலையாளப் பாட்டு .
முத்துராமனுக்காக அவர் இசைத்த பாடலில் பெண் குரல்
யாரென்று தெரிகிறதா?
சிவகுமார் கேள்விக்கென்ன பதில்?
ஜெய்சங்கரோடு மேடையில் மெல்லிய பூங்காற்று ஆடிடுமோ?
மு.க.முத்து இங்கே காதலின் பொன் வீதியில் நடை பயில்கிறார்.
கமலஹாசனிடம் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
ரஜனிகாந்த் நம்ம ஊரு சிங்காரியோடு சிங்கப்பூரில் பாடுகிறார்.
இன்றைய பகுதியின் இறுதியாக இந்தப் பாடலைப் பாருங்கள். எப்போதும் உற்சாகம் தரும் இப்பாடல் இன்று என்னவோ ஒரு துளி கண்ணீரை வரவழைத்து விட்டது. அது ஏனென்று பாடலைப் பா
அருமையான பாடல்கள்! மெல்லிசை மன்னருக்கு சிறந்த அஞ்சலி!
ReplyDelete