கோபுர வாசலிலே படம் பற்றி நேற்று நான் பதிவிட்டிருந்ததற்கு பின்னூட்டம் எழுதியிருந்த ஒருவர் "அந்த திரைப்படம் பார்த்த பின்பு நான் திரைப்படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்" என்று எழுதியிருந்தார்.
நான் அவ்வளவு வைராக்கியம் கொண்டவன் அல்ல. திரைப்படம் பார்ப்பதையெல்லாம் நிறுத்தவில்லை. ஆனாலும் ஒருவரது திரைப்படம் மற்றும் பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்து அதை இன்று வரை அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
1981 என்றுதான் நினைக்கிறேன். மதுரை திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கத்தில் இரண்டாவது ஆட்டத்திற்கு டி.ராஜேந்தர், கதை திரைக்கதை, வசனம் எழுதி, பாடல் இயற்றி இசையமைத்து இயக்கி இரட்டை வேடத்தில் நடிக்கவும் செய்த "உறவைக் காத்த கிளி" படத்திற்கு ஒரு பத்து பேராக சென்றோம்.
உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் படங்களை பார்த்த போதே உஷாராகியிருக்க வேண்டும். தியேட்டர் வாசலில் இருந்த சுவரொட்டி அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொன்ன போதாவது எச்சரிக்கையாகி பின்வாங்கியிருக்க வேண்டும்.
வேட்டி கட்டியவர் அண்ணன், பேண்ட் போட்டவர் தம்பி என்று இரட்டை வேடத்தில் மிகப் பெரிய வித்தியாசம் காண்பித்து சாதனை படைத்தவர் உலக திரைப்பட வரலாற்றிலேயே டி.ஆர் மட்டுமே. படம் முழுதுமே அவர் மட்டுமே வந்து கொண்டிருந்தார். இருவரும் கத்தி கத்தி பேசிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு "இனிமே என் படம் பாக்க வருவாயா" என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
படம் முடிந்து வெளியே வந்து கலைவாணி தியேட்டர் வாசலில் சபதம் எடுத்துக் கொண்டோம். இனி வாழ்நாளில் டி.ஆர் படம் பார்க்கவே மாட்டோம் என்பதுதான் அந்த சபதம். முப்பத்தி இரண்டு வருடங்களாக அந்த சபதத்தை காப்பாற்றி வருகிறேன்.
"வீராச்சாமி" என்று அற்புதமான காவியம் ஒன்றை எடுத்துள்ளார். அவசியம் பாருங்கள் என்று சிலர் சொன்ன போது கூட சபதத்தை காப்பதுதான் முக்கியம் என்று உறுதியாக இருந்து விட்டேன்.
1984 இல் வெளிவந்த படம். 81 அல்ல. நான் அப்போதே இவர் படங்களை பார்ப்பதை தவிர்த்துவிட்டவன். இவரது சில பாடல்கள் நன்றாக இருக்கும்.
ReplyDeleteசபதத்தைத் தொடர்ந்து காப்பாற்றுங்கள் நண்பரே
ReplyDelete