Wednesday, March 18, 2015

மகள் கடத்தல் - முப்தி மீது சந்தேகம் வருதே!




1989 டிசம்பர் மாதம் எட்டாம் நாள் நடந்த அந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது.

ராஜீவ் காந்தியை தோற்கடித்து விஸ்வநாத் பிரதாப் சிங் பிரதமராக பதவியேற்று ஐந்து தினங்கள்தான் முடிந்திருந்தது. அவரது  அரசில் உள்துறை அமைச்சராக இன்றைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது  பொறுப்பேற்றார்.

அவரது இளைய மகள் ரூபையா சையது ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி. அவர் கல்லூரியிலிருந்து திரும்பி வருகையில் கடத்தப்படுகிறார். அவரை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் விடுதலைப் படையின் ஐந்து தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.

பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பு ஐந்து தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். ரூபையாவும் வீடு திரும்புகிறார். அன்று காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் வி.பி.சிங்கை கடுமையாக தாக்க இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இன்னும் மோசமான சம்பவம் நடந்தது வேறு கதை.

வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்டுக் கொண்ட கதையாக முப்தி முகமது சையதிடம் சிக்கிக் கொண்டு 56 இஞ்ச் ஆணழகன் மோடி அவஸ்தைப் படுவது மகிழ்ச்சியளிக்கிற வேளையில் ஒரு சந்தேகமும் வருகிறது.

தேர்தல் அமைதியாக நடந்ததற்கு முப்தி முகமது சையத் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும்  நன்றி சொல்வதைப் பார்க்கையில் ஒரு சாமானியனான எனக்கு வருகிற சந்தேகம் வேறொன்றுமில்லை ஜெண்டில்மேன், மகளின் கடத்தலை அப்பாவே செட் அப் செய்திருப்பாரோ?

1 comment: