Wednesday, March 4, 2015

சமஸ்கிருதம் மட்டும் ரொம்ப புரிஞ்ச மொழியா?




மேலே உள்ள நோட்டீஸ் வேலூர் மாவட்ட இந்து முன்னணி வெளியிட்டது. குடியிருப்புப் பகுதியில் வழிபாட்டுத் தளம் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கான தார்மீக உரிமை காவிக் கூட்டத்திற்கு இருக்கிறதா என்று நாளை எழுதுகிறேன்.

எப்படி வெறியை கிளப்புகிறார்கள் என்பதற்கு இந்த நோட்டீஸும் ஒரு உதாரணம்.

மர்ம மனிதர்கள் வருகிறார்கள். புரியாத மொழியில் கூச்சலிடுகிறார்களாம்,  அதனால் அச்சுறுத்தலாக இருக்கிறதாம். மெல்லக் கொல்லும் விஷத்தை புகட்டியுள்ளார்கள்.

புரியாத மொழியில் கூச்சலிடுவதாக உருதுவையோ அல்லது அரபியையோ சொல்கிறார்கள். சரி அது புரியாத மொழியாகவே கூட இருக்கலாம். 

இவர்கள் கோயில்களிலும் திருமணம் உள்ளிட்ட சடங்குகளிலும் ஓதுகிறார்களே சமஸ்கிருதம், அது மட்டும் என்ன ரொம்ப புரிந்த மொழியா இல்லை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் மொழியா?

காவிஸ் கொஞ்சம் யாராவ்து பதில் சொல்லுங்கப்பா.

இந்த நோட்டீஸில் ஒரு சட்ட விரோத அம்சம் ஒன்று இருக்கிறது. யார் சரியாக சொல்கிறீர்கள் பார்ப்போம்
 

1 comment:

  1. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது போராட்டம் செய்வோம் என்பது நீதி மன்ற அவமதிப்பு செயலாகும். இதுதான் அந்த அறிக்கையில் உள்ள சட்ட விரோத அம்சம் என எண்ணுகிறேன்.

    ReplyDelete