Saturday, March 28, 2015

இளையராஜாவின் ஆஸ்கர் வரிசையில் இன்று

 http://i.ytimg.com/vi/clRa4aGfNkA/hqdefault.jpg

 http://www.iflickz.com/wp-content/uploads/2014/02/mahendran-and-ilayaraja-team-up-again.jpg

 http://i.ytimg.com/vi/hk3079rOcxI/hqdefault.jpg

ஆஸ்கருக்கு அனுப்பியிருந்தால் இசைஞானி இளையராஜாவிற்கு  கண்டிப்பாக விருது கிடைத்திருக்கும்  என்று இப்படத்தின் பெயரை நான் சொன்னால் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்கள்.

ஜானி

ராஜா கொடுத்த மிகப் பெரிய இசை விருந்து இப்படம்.

பாடல்கள், பின்னணி இசை என்று இரண்டிலுமே தூள் கிளப்பியிருப்பார் ராஜா. நான் பள்ளியில் படிக்கும் போது வந்த படம். பாடல்களை இன்று கேட்டாலும் புதிதாகவே இருக்கிறது. புத்துணர்வையும் தருகிறது. 

இனிய மனது கொண்ட  எல்லோருக்கும் இந்த இசை பிடிக்கும்.


முப்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் இன்னும் காற்றில் அவரது கீதம் ஒலித்துக்  கொண்டுதான் இருக்கிறது.

இந்த தாளகட்டையை தூது விட்டாவது  கைப்பற்றிக் கொள்ளுங்கள்.

பாடல்கள் மட்டுமா அற்புதம்?

அதற்கு போட்டியாய் இருப்பது  பின்னணி இசை.

ஜானி படத்தின் பின்னணி இசையின் சில பகுதிகள் மட்டும் இங்கே உள்ளது 


ராஜாவின் தலை சிறந்த நூறு படங்கள் என்று பட்டியல் போட்டால் அதில்
ஜானிக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

பின் குறிப்பு : பின்னணி இசையின் இரண்டாவது இணைப்பைப் பார்க்கையில் எனக்கு தோன்றிய ஒரு கருத்து.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து ரஜனிகாந்த் என்ற நல்ல நடிகனை நமது ரசிகர்களும் இயக்குனர்களும் தொலைத்து விட்டார்கள்.

6 comments:

  1. ஜானி படம் வந்த அதே சமயத்தில்தான் குரு என்ற கமல் படமும் வந்தது. அதில் ஸ்ரீதேவி வெகு தாராளமாக நடித்திருப்பார் ஜானியை ஒப்பிடும்போது. ஒருவேளை அதனால் மகேந்திரனின் ஜானி ஊற்றிக்கொண்டதோ என்று ஒரு கருத்து உண்டு. குரு படத்திலும் பாடல்கள் நன்றாகவே இருக்கும். ரஜினி இரட்டை வேடம் என்றதும் ரசிகர்கள் மிகப் பெரிதாக எதிர்பார்த்தார்கள். அது இல்லை என்றதும் குருவிடம் திரும்பிவிட்டார்கள்.

    ஆஸ்கர் கிடைத்திருக்குமா என்பது ஒரு hypothetical question. இது போல பல இசை அமைப்பாளர்கள் பற்றி இப்போது நாம் கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. குரு - ஐ.வி.சசி இயக்கத்தில் வந்தது. அதைப் போலவே மகேந்திரனிடமும் எதிர்பார்த்தது ரஜனி ரசிகர்களின் தவறு. என் பதிவில் சொன்னது போல ரஜனி என்ற நல்ல நடிகனை அவரது ரசிகர்கள்தான் காணாமல் போகும்படி செய்து விட்டார்கள்

      Delete
  2. பாடல்கள் ஒவ்வொன்றும்அற்புதம்
    எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காத பாடல்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. Oscar award is for english movies made in USA and Europe. Only a few Oscar award for foreign language films. You guys know this well.

    The point is that we need not to argue whether The Great Ilayaraja might have gotten Oscar award or not. His musical composing is far beyond the limitation of Oscar award. He is great!

    ReplyDelete
    Replies
    1. I share the great experience of listening Raja and to stress that it is world Class Music, I am referring Oscar Award. He deserves more than that as you rightly pointed out

      Delete