Wednesday, March 4, 2015

மற்ற எம்.பி க்கள் எல்லாம் ரொம்பவே பிஸி ?

 
நேற்று மக்களவையில் இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2015 ஐ மோடி அரசு அறிமுகம் செய்தது பற்றியும் அதன் மோசடி பற்றியும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

அந்த மசோதாவை  அறிமுகம்  செய்யலாமா, வேண்டாமா என்பதே வாக்கெடுப்பில்தான் முடிவானது.

அறிமுகம் செய்யலாம் என்பதற்கு ஆதரவாக 131 எம்.பி க்களும் அதை எதிர்த்து 45 எம்.பி க்களும் வாக்களித்திருந்தனர்.

544 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் நேற்று அவைக்கு வந்திருந்தது வெறும் 176 எம்.பி க்கள் மட்டுமே. அதிலும் இது அதி முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் வேறு.

ஒரு வேளை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி ம்க்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மும்முரமாக இருப்பார்களோ?

No comments:

Post a Comment