நேற்று நெய்வேலி போயிருந்தேன்.
திரும்பி வரும் வழியில் திருக்கோயிலூருக்கு முன்பாக பெரிய செவலை என்ற ஊரிலிருக்கிற கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிக் கொண்டு லாரிகளும் டிராக்டர்களும் சென்று கொண்டிருந்தன.
அங்கங்கே வழியில் பல கரும்பு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. பொதுவாக இது போன்ற கரும்பு வாகனங்கள் நின்றாலோ இல்லை சென்றாலோ சிறுவர்கள் மெலே ஏறி கரும்பை எடுப்பது என்பது வாடிக்கையான காட்சி.
ஆனால் இன்று அப்படியெல்லாம் எதுவும் நிகழவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களாக அப்படிப்பட்ட காட்சிகளே கண்ணிற்கு படவில்லை.
என்ன ஆயிற்று நம் சிறுவர்களுக்கு?
கரும்பு வாகனத்தை துரத்துவதில் சுவாரஸ்யம் குறைந்து விட்டதா?
இல்லை கரும்பின் மீதே சுவாரஸ்யம் குறைந்து விட்டதா?
பின் குறிப்பு " மேலே உள்ள படம் சும்மா போஸ் மட்டுமே. ஒரு களப் பணிக்காக ஒரு கிராமம் சென்ற போது கரும்பை ஏற்றுவதற்காக அந்த ஒற்றையடிப்பாதையில் வழி கிடைக்காமல் எங்கள் பயணம் சற்று தடை பட்டிருந்த போது கரும்பு ஏற்றிய டிராக்டரில் அமர்ந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம்.
எங்க ஊர்ல கரும்பே இப்ப இல்ல. அதனால இந்த மாறுதல் கண்ணில் படவில்லை. ஆனால் இந்த மாறுதல் சமுதாய வளர்ச்சியில் எங்கோ குறை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ReplyDeletewhere. As a farmer and village man, i belive the following could be the reasons...the current grade of sugarcane is very hard to chew and now a days farmers are not too harsh if boys take some sugarcane in the field.
Deletemanal Maffia
ReplyDeletemaaadhiri...
idhu Karumbu- mafiaaa-vaa?
chumma joke! sir! tenson aa-gaa-theenga.
இன்றைய சிறுவர்களுக்கு இதற்கெல்லாம் ஏது நேரம்,
ReplyDeleteதொலைக் காட்சி பார்க்கவும், படிக்கவுமே நேரம் போதவில்லை
Boys choose to climb on the truck when the truck is moving slowly. ...for some reason if the driver increase the speed, this boy cannot get down from the truck, he has to hang and travel for few km to get chance. Let them better watch TV instead of this adventure.
DeleteIt not happening now a days. Lot of accidents are occurring while taking the sugar cane from back side of the tractor.
ReplyDeleteSo whenever boys ask sugarcane, the driver used to pick it from front side and give to them.
This is what happening in my village
DeleteThis is what happening in my village side
DeleteYou are correct and i am seeing this attitude in my village side
DeleteGood that nowadays children are not following the truck. I had seen few accidents where boys broke their limbs for piece of cane
ReplyDelete