Sunday, August 5, 2012

புது ஹீரோ, ஹீரோயின்





ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த முறை பெற்ற பதக்க எண்ணிக்கையை 
இந்த வருடமும் பெற்று விட்டோம். ஒரு தங்கம்,
ஒரே ஒரு தங்கம் கிடைத்தால் அது கூட
முன்னேற்றம். மேரி கோம் மீது நம்பிக்கை வைப்போம்.

அமெரிக்காவிற்கு சலாம் போட விகாஸ் கிருஷ்ணனை
போட்டுத் தள்ளி விட்டார்கள். இங்கிலாந்தின் அழுகுணி
ஆட்டத்தில்  தோற்றுப் போன மனோஜ் குமாரின் துயரத்தைக்
கேட்க யாருமில்லை.

ககன் நரங், விஜயகுமார், சாய்னா நெஹ்வால் ஆகியோர்
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

செல்லுலாய்ட் பிம்பங்கள், கிரிக்கெட் பிம்பங்கள் ஆகியோரைக்
கொஞ்சம் ஒதுக்கி வைத்து இவர்களை கொண்டாடுவோம்.
அப்போதுதான் அடுத்த ஒலிம்பிக்கிலாவது நமது எண்ணிக்கை
இரட்டிப்பாகும்.
 

1 comment:

  1. Just in... Mary Com won the QF match.
    Wish her all the best for semi final match, where she would face the 1st seed.

    ReplyDelete