Tuesday, August 14, 2012

மனம் நிறைவாகியதே....

எங்கள் வேலூர் கோட்ட மாநாடு நேற்றும், நேற்று முன்  தினமும்
வெற்றிகரமாக நடந்தது. அனைத்து அம்சங்களிலும் மாநாடு
சிறப்பாக இருந்தது. அறிக்கை மீதான விவாதத்தில் நாற்பத்தி
ஐந்து தோழர்கள் பங்கேற்றதும் அதிலே பத்து தோழர்கள் 
மகளிர் தோழர்கள் என்பதும் மிகவும் மகிழ்ச்சி அளித்த ஒன்று.
மாநாடு பற்றிய தீக்கதிர் நாளிதழ் செய்தி கீழே.

 


பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைத்திடுக
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க மாநாடு தீர்மானம்

 



வேலூர், ஆக. 12-
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறு வனமாக இணைத்திட வேண் டும் என்று காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது.காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்க வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு 25வது பொது மாநாட்டை தொடங்கி வைத்து வி. ரமேஷ் இவ்வாறு பேசினார்.கோட்டத்தலைவர் எம். தசரதன் தலைமையில் நடை பெற்ற இரண்டு நாள் மாநாட்டு கொடியை இணைச்செயலாளர் டி.செந் தில்குமார் ஏற்றி வைத்தார். தியாகிகள் ஜோதியை எல் ஐசி ஒய்வூதியர் சங்க தலை வர் என். ஏகாம்பரம் பெற் றுக் கொண்டார். படக் கண் காட்சியை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வி. குபேந்திரன் திறந்து வைத்தார். வரவேற்புக் குழு துணைத் தலைவர் எஸ். டி. சங்கரி வரவேற்றார்.

 மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அகில இந்திய காப் பீட்டுக்கழக ஊழியர்சங்க இணை செயலாளர் வி. ரமேஷ் அமெரிக்காவில் தனியார் இன்சூரன்ஸ் நிறு வனங்கள் திவாலாகி விட்ட சூழலில் இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வாக்கும் மத்திய அரசின் செயல் சேதத் துரோகம் என்றார்.

மாநாட்டில் எம். குன்னி கிருஷ்ணன், பி. துளசி ராமன், ஜே.கே.என். பழனி, என். காசிநாதன், ஏ. நாராய ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோட்ட பொதுச்செயலாளர் எஸ். ராமன் நன்றி கூறினார்.

ரூபாயின் மதிப்பு குறை வதற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருவதற்கும் காரணமான உலயமகமாக்கல் கொள் கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் தடைசெய்யப்பட வேண்டும். சில்லறை வணி கத்தில் அந்நிய நேரடி முத லீட்டை கைவிட வேண் டும். 

வங்கித் துறை சீர்திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். புதிய பென் சன் திட்டம் கைவிட வேண் டும். இந்தியக் கல்வித்துறை யில் அந்நிய பல்கலைக்கழகங் களை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு பால், பேருந்து கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும். பொது இன்சூரன்ஸ் நிறுவ னங்களை ஒரே நிறுவன மாக இணைத்திட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. 

மாலையில் சாரல் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சி கள் நடந்தது.

No comments:

Post a Comment