மிகக் குறைவான விலையில் பெட்ரோல் விற்கும் பத்து நாடுகள் எவை என்று தெரியுமா? அங்கேயெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா?
இதோ உங்களுக்காக அந்த தகவல்
வெனிசூலா 7.01
எகிப்து 7.89
சவுதி அரேபியா 8.76
கத்தார் 10.52
பஹ்ரைன் 13.15
லிபியா 13.15
குவைத் 14.90
துர்க்மேனிஸ்தான் 14.90
அல்ஜீரியா 14.90
இராக் 18.41
இது அத்தனையும் ரூபாய் மதிப்பில்தான். இந்தியாவில் ஒரு லிட்டர் ரூபாய் எழுபத்தி ஏழு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நாடுகள் எல்லாம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், அதனால் அங்கே விலை மலிவு என்று சிலர் வாதிடலாம். நாம் மறக்க முடியாத ஒரு உண்மை ஒன்று உண்டு.
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து சந்தைக்கு அனுப்ப ஆகும் செலவை விட பல மடங்கு நாம் வரியாக அரசுக்கு தண்டம் அழுது கொண்டிருக்கிறோம். உள்நாட்டு உற்பத்திக்கும் இறக்குமதி ஆகும் எண்ணெய்க்கான விலையை தந்து கொண்டிருக்கிறோம்.
இன்னொரு விஷயமும் உண்டு. இந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்வதாலேயே தனது மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. கூடுதல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளை லாபம் அடிக்கலாமே?
இந்திய அரசைப் போல அவ்வளவு மோசமான அரசாக அவர்கள் இல்லை என்பதுதான் உண்மை!
So you dont know what is economics?
ReplyDeleteபொருளாதாரம் தெரிந்ததால்தான் இந்த பதிவே எழுதப் பட்டுள்ளது திருவாளர் அனாமதேயம். மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை இந்திய ஆட்சியாளர்கள் கடைபிடிப்பதில்லை என்ற உண்மை புரியாமல் நக்கலாக பின்னூட்டம் போட வந்துள்ள உங்களைப் போன்ற அரைகுறை பேர்வழிகள்தான் மன்மோகன் வகையறாக்களுக்கு மூலதனம்
ReplyDeleteவிவரம் தெரியாமல் எழுதி உள்ளீர்கள். பெட்ரோல் விலைய அதிகமாக்கி, அதனால் டீசல் விலையைக் குறைத்து விற்கிறார்கள். விவசாயிகளுக்கு மானியம் எங்கேயிருந்து வரும்?
ReplyDeleteஅதேபோல, மண்ணெண்ணெயும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.
ஏழைகளுக்கு உதவி செய்கிறோம் என்று இன்னும் பல ஏழைகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.
இது மாதிரி இலவசங்கள் / மானியங்கள் இல்லாவிட்டால் நீங்கள் சொன்ன படி பெட்ரோல் 20 ரூபாய்க்கு விற்க முடியும்.
ஆனா, தேர்தலில் ஜெயிக்க முடியாது.