Wednesday, August 15, 2012

அப்பாடியோ! இவ்வளவு தேச பக்தியா? இல்லை இது வன்மம்






என் மகன் முக நூலிலிருந்து எடுத்துக் கொடுத்த படம்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுகிறோம்
என்ற பெயரில் உலகெங்கும் உள்ள மக்களின் விடியலுக்காக
பாடுபட்ட ஒரு மாவீரனை களங்கப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபப் புரட்சியில் பங்கேற்று
பொலிவிய மண்ணில் அமெரிக்கப் படைகளால் 
கொல்லப்பட்ட சேகுவாரா, எல்லைகள் கடந்து எல்லோராலும்
நேசிக்கப்படுபவர். வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்திய விடுதலைப்
போராட்டத்தில் கூட அவர் கலந்து கொண்டிருப்பார்.

கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவர் மீது வன்மமாய் 
பார்வையை செலுத்தியுள்ளார்கள்.

சுதந்திரப் போராட்டங்களின் நாயகன் சேகுவாரா.
இந்திய சுதந்திர தினத்தன்று அவனை கொச்சைப்
படுத்த வேண்டாம்.

4 comments:

  1. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க சார்...

    ReplyDelete
  2. we have to remember our leaders but at the same time we should not insult others.

    ReplyDelete
  3. அருமையான படம். இதை உருவாக்கியவருக்கு வாழ்த்துகள். எந்த கம்யூனிஸ்ட் பையப்புள்ளையாவது - இந்திய தலைவர்களை கொண்டாடுகிறதா. உங்களுக்கொரு நன்றி. அருமையான படத்தை அறிமுகம் செய்தமைக்கு.

    ReplyDelete
  4. அரசியல் ஞான சூனியமான அனாமதேயமே,
    பகத்சிங்கையும், சந்திரசேகர் ஆசாத்தையும் கொண்டாடுவது, இன்றளவும் போற்றுவது கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். அதே போல சுபாஷ் சந்திர போஸ் மீதும் மதம் கடந்த விவேகானந்தர் மீதும் மதிப்பு வைத்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான். படத்தில் உள்ள நால்வரையும் காங்கிரஸ் கட்சியோ, சங் பரிவாரக் கும்பலோ எந்நாளும் சீண்டியது கிடையாது. விவேகானந்தர் மீது மரியாதை உள்ளதாய் பரிவாரம் பம்மாத்து செய்யும். ஆனால் அவர் சொன்னபடி நடக்காது.அரசியல் தெரிந்து கொண்டு பின்னூட்டம் போடவும்.

    ReplyDelete