Thursday, August 23, 2012

தின மலர் பத்திரிக்கையின் வக்கிரம்

வக்கிரமான செய்திகளையும் தலைப்புக்களையும் வெளியிடும்
தின மலர் பத்திரிக்கையின் விஷமத்தனம் இன்றும் 
வெளிப்பட்டுள்ளது.

வங்கித்துறையை பாதுகாக்க ஒரு தேச பக்த கடமையாக
வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நேற்றும் இன்றும்
வெற்றிகரமான ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை
நடத்தினார்.

வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதே என்று சிலருக்கு
எரிச்சல் வரலாம். ஆனால் இந்த வேலை நிறுத்தம்
இல்லையென்றால், வேலை நிறுத்தக் கோரிக்கைகள்
வெற்றி பெறாவிட்டால் இந்தியாவில் உள்ள 
சாமானிய மனிதர்களுக்கு என்றுமே வங்கிச் சேவைகள்
கிடைக்காது. இது பற்றி பிறகு விரிவாக பார்ப்போம்.

இப்போது தினமலரின் வக்கிரத்திற்கு வருவோம்.

நாளிதழுக்கான சுவரொட்டியில் "ஐந்து வங்கிகள்
திறப்பு" என கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள்.
உள்ளே பார்த்தால் வேலை நிறுத்தம் பற்றிய முழுமையான
செய்திகள்,  பத்து லட்சம் பேர் கலந்து கொண்டது, பணிகள்
முடங்கியது எல்லாவற்றையும் பிரசுரித்து விட்டு, புதிய
வங்கிகள் ஐந்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து 
கொள்ளவில்லை என்று போகிற போக்கில் எழுதி
இருந்தார்கள்.

வெற்றிகரமான வேலை நிறுத்தம் என்பதுதான் உண்மை.
அதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் சுவரொட்டியில்
ஐந்து வங்கிகள் திறப்பு என போட்டு தனது வக்கிரத்திற்கு
வடிகால் தேடிக்கொண்டது.

நாயை மனிதன் கடித்தால்தான் செய்தி என்ற கொள்கை
உள்ள தினமலரிடம் நேர்மை, நாணயம் இவற்றையெல்லாம்
எதிர்பார்த்தால் நாம் முட்டாள்கள்.

4 comments:

  1. தினமலர் மட்டுமல்ல பல ஏகபோகவாதிகளின் அடிவருடி ஊடகங்கள் இப்படித் தான் நஞ்சினைக் கக்கும் என்பதை உணர்வார் உணர்வார் !

    ReplyDelete
  2. தினமலர் தமிழ் பத்திரிக்கைகளின் கரும்புள்ளி என்பது உலகறிந்த விசயம்தானே...

    ReplyDelete
  3. தினமலர் என்றுமே விஷத்தை மட்டுமே கக்கும் ...

    ReplyDelete
  4. இதுல உண்மையின் உரைகல்'னு ஒரு பேரு வேற..
    த்தூ.....

    ReplyDelete