Friday, August 31, 2012

இதை முன்னாடியே சொல்லக் கூடாதா என நரேந்திர மோடியிடம் எரிந்து விழுந்த மன்மோகன்சிங்




குஜராத்தில் பெண்கள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதற்கு
அங்கே உள்ள பெண்கள் நடுத்தரப் பெண்கள் என்றும் 
அவர்களுக்கு அழகுணர்வு அதிகம் உள்ளதால் மிகக்
குறைவாகவே சாப்பிடுகிறார்கள். ஆகவே ஊட்டச்சத்து
குறைவுள்ளவர்களாக உள்ளார்கள் என்ற அரிய,
அறிவியல், சமூக கண்டுபிடிப்பை குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி சொல்லியுள்ளார்.

இந்த அபத்தக் கருத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட நரேந்திர மோடியை
மிகக் கடுமையாக கண்டித்துள்ளதாக சி.பி.ஐ தகவல்
கிடைத்துள்ளது. 

என்ன தெரியுமா?

இவ்வாறு மன்மோகன் சிங் சொன்னாராம்.

" அடேய் படுபாவி, இதை முன்னாடியே சொல்லியிருக்கக் 
கூடாதா! இது தெரிந்திருந்தால் இந்தியாவில் நாற்பது
சதிவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது
தேசிய அவமானம் என்று சொல்லியிருக்க மாட்டேனே!
இந்தியக் குழந்தைகள் பிறக்கும் போதே அழகுணர்வோடு
பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஊட்டச்சத்து
குறைவாக உள்ளார்கள். பிறக்கும் குழந்தைக்குக்க்கூட
அழகுணர்வு இருப்பது எங்கள் அரசின் சாதனை. அதனால்
சீர்திருத்தங்கள் தொடர வேண்டும் என்று சொல்லியிருப்பேனே "

என்று சத்தம் போட்டாராம்.

பாவம்தானே மன்மோகன்சிங்1
நரேந்திர மோடிக்கு உள்ள அறிவு அவருக்கு இல்லையே!
 

3 comments:

  1. இந்திய வகுப்புவாத அரசியலும், ஊடகமும் தூக்கி நிறுத்திய மாய பிம்பம் தான் ந.மோடி. இவரால் மட்டும் தான் இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற ஒரு தவறான வாதம் திரும்ப திரும்ப அழுத்தமாக சொல்லப்பட்டு வரும் வேளையில் தான், மோடியின் அந்த பிம்பம் அவரது பேச்சாலேயே உடைக்கப்பட்டு விடும் என்று நம்பலாம்.

    ReplyDelete
  2. Just because we still have leaders like NM, still india is not being sold to italy,or US

    ReplyDelete
  3. Mr Anani - This is the Reply

    ஒரு நிருபர்: "நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்சியடைந்திருப்பதாக சொல்கிறார்களே?"

    நந்திதா தாஸ்: "ஹிட்லரின் ஆட்சியில்தான் ஜெர்மனியின் மிகச்சிறந்த சாலைகள் போடப்பட்டன. ஆனால் அதற்காகவெல்லாம் நாம் ஹிட்லரை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஹிட்லர் ஒரு இனவழிப்புக் கொலைகாரன்... அப்படித்தான் மோடியும்..."

    ReplyDelete