Thursday, August 2, 2012

இவன்தான் உண்மையில் மானம் காத்த மாவீரன் ....



ககன் நரங் ஒலிம்பிக் வெங்கலப்  பதக்கம் பெற்றபோது
உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பதக்கப் பட்டியலில்
இந்தியாவின் பெயர் உறுதி செய்யப்பட்டது. 

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு மூன்று
ஒலிம்பிக் போட்டிகளில் ( 1984- லாஸ் ஏஞ்சல்ஸ் , 1988 -சியோல்,
1992- பார்சிலோனா ) இந்தியா வெறுங்கையோடே திரும்பி
வந்தது. 

வாராது வந்த மாமணியாய் அட்லாண்டாவில் லியாண்டர்
பயஸ் வெங்கலம் வென்றார். அதன் பின்பு கர்ணம் மல்லேஸ்வரி
ராஜ்யவர்த்தன் ரதோர் ஆகியோர் பதக்கப் பட்டியலில்
இந்தியாவை இடம் பெற வைத்தனர்.

அதிகபட்சமாக மூன்று பதக்கங்களை கடந்த முறை வென்றோம்.
இம்முறை  முதல் பதக்கத்தைப் பெற்று இந்தியாவின் பெயரை
பதக்கப் பட்டியலில் ககன் நரங் இடம் பெறச் செய்து விட்டார்.


மற்ற வீரர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
பலரும் ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். ஆனாலும் நல்லது
நடக்கும் என நம்புவோம். வாழ்த்துவோம்.


ஒரு சிறு வருத்தமும் உண்டு.  இந்தியா ஒரு கிரிக்கெட் மேட்சில்
வென்றால் பட்டாசுகள் வெடிக்கும், குறுஞ்செய்திகள் பரவும்,
தொலைக்காட்சியில் இருபத்தி நான்கு மணி நேரம் ஸ்க்ரோல்
ஓடிக் கொண்டிருக்கும்.


ஆனால் ககன் நரங் வெற்றி பற்றி ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டுமே
எனக்கு வந்தது. நான் ஒரு இருபது பேருக்கு அனுப்பி வைத்தேன்.
தொழிற்சங்கம் தாண்டி நான் முதன் முதலாக அனுப்பிய செய்தி
கூட இதுதான்.


கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்களையும் நாம் கொண்டாடினால்
மட்டுமே பதக்கங்கள் குவியும்.

1 comment:

  1. Actually we now have no cable network for tv at home. I have to check the official site for London Olympics as and when I find time. It is my pleasure to announce I too have friend/s to share such good news on sms - that Saina qualified for QF, won QF, etc. Please donot underestimate our friends - lots of Indians watch / follow Olympics, as most of the Team India come from BPL background. Despite the drawbacks and faults in the sports administration mechanism, political interference and all, people take pride in representing India. Let's salute them!!!

    ReplyDelete