இந்தியாவின் மிக மோசமான பிரதமர்களின் பட்டியலில் முதலிடம்
பிடித்து விட்டார் மன்மோகன்சிங். தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு
அவர் அளித்த பேட்டி அவரது முகத்திரையை கிழித்து விட்டது.
கூட்டணி தர்மத்தின் விளைவு ஊழல் என்று சொல்லி தி.மு.க வும்
ராசாவும் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பொறுப்பு என்று
கைகழுவி விட்டு தான் ரொம்ப யோக்கியன் போல காண்பிக்க
முயற்சிக்கிறார். ஆதர்ஷ் ஊழலும் காமன்வெல்த் ஊழலும்
காங்கிரஸ்காரர்கள் செய்யாமல் செவ்வாய்கிரகத்துவாசிகளா
செய்தார்கள்.
விலைவாசியை கட்டுப்படுத்த முடியாதாம். இதைத்தான் அவர்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த புடலங்காய் பொருளாதார
படிப்பு கற்றுக் கொடுத்தது போலும். ஆன்லைன் வர்த்தகத்தை
தடை செய்யுங்கள், பதுக்கலை தடை செய்யுங்கள் என்று இடதுசாரிகள்
கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார்களே, இவர் காதை என்ன
டர்பனுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாரோ!
இதை விட மிகப் பெரிய கொடுமை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசம்
இழந்ததை உணவுப் பொருட்களுக்கு வழங்கும் மானியத்தோடு
ஒப்பிட்டடதுதான். அன்றாட வருமானம் இருபது ரூபாய் கூட
இல்லாத ஏழை மக்களுக்கு ரேஷன் கடையில் புழுத்த அரிசி
வாங்க அளிக்கும் மானியமும் பெரும் பெரும் செல்வந்தர்கள்
கொள்ளையடித்ததும் ஒன்றாம். மனசாட்சியே இல்லாத
அராஜகப்பேசசு.
இதை சொல்லும்போது மன்மோகன்சிங்கின் பற்கள் நீண்டு
அடுத்தவரின் ரத்தம் ருசித்து அது கடைவாயில் ஒழுகியது
போலவே இருந்தது. இடையில் அவர் பதவி விலக மாட்டாராம்,
அதை மட்டும் உறுதியாகச்சொல்லிவிட்டார். அப்போதுதானே
அமெரிக்காவிற்கு மிச்சம் மீதி இருப்பதையும் விற்க முடியும்!
பகத்சிங்கையும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தையும் இந்த தேசத்திற்கு
அளித்த பஞ்சாப் மண் இந்த தேச துரோகியையும் அளித்தது
என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு?
No comments:
Post a Comment