Wednesday, February 9, 2011

தலை சுத்துதப்பா சாமி?

அலைக்கற்றை  என்ற வார்த்தையைக் கேட்டாலே  இப்போதெல்லாம்
தலை சுற்றுகின்றது. 

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அ.ராசா கைது,  தி.மு.க பொதுக்குழு தீர்மானம்,  நாடாளுமன்ற கூட்டுக்குழு  விசாரணை வருமா வராதா என்ற விவாதம், இம்முறையாவது நாடாளுமன்றம்
நடந்து  இந்திய, வெளி நாட்டு முதலாளிகளுக்கு ஏதாவது  நல்லது  நடக்குமா என்ற எதிர்பார்ப்பு, ஆகியவற்றால் குழம்பிப் போயிருக்கும் 
இந்தியர்களை  மேலும்  குழப்ப வந்துள்ளது  புதிய அலைக்கற்றை 
சர்ச்சை. 

இந்தியாவிற்கு  பெருமை சேர்க்கும் இந்திய விண்வெளி  ஆராய்ச்சி 
நிறுவனத்திலா  இப்படி  என்று  அதிர்ந்து போயிருக்கிறது  தேசம். 
ஊழல் நடந்ததா இல்லையா  என்பதில்  வேண்டுமானால்  இப்போது 
பல விதக் கருத்துக்கள்  வரலாம். ஆனால் அதற்கான  அடித்தளம் 
உருவாக்கப் பட்டுள்ளது  என்பதும்  இத்தகவல்கள்  வெளி வரவில்லை 
என்றால் கண்டிப்பாக  ஊழல் நடந்திருக்கும். தேசத்திற்கு வர வேண்டிய
கோடிக்கணக்கான ரூபாய்  எங்கோ போய் பதுங்கியிருக்கும்  என்பது
மட்டும்  தெளிவு. 


இந்த ஊழல் வெளி வந்துள்ளது கருணாநிதிக்குத்தான் லாபம். 
மன்மோகன்சிங்  பொறுப்பில் உள்ள துறையில் ஊழல்  என்பதால்
இதனைச்சொல்லி  அவர் கூட காங்கிரசை மிரட்டலாம்! 


அடுத்த ஊழல் எப்போது ? எத்தனை லட்சம் கோடி ரூபாய்? 
பெருமையை தட்டிசசெல்லப்போவது  யார்?

No comments:

Post a Comment