Wednesday, February 16, 2011

பாழாப்போன உலகக் கோப்பை போட்டிகளை பரீட்சைகளுக்குப் பிறகு வைக்கக்கூடாதா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் 
மூணு நாள், இரண்டு நாள், ஒரு நாள் என ஏதோ சாட்டிலைட் 
ஏவுவது போல  ஊடகங்கள்  கவுன்ட் டவுன்  கொடுக்க கொடுக்க
பெற்றோர்களின்  ரத்தக் கொதிப்பு அதிகமாகிக் கொண்டே 
இருக்கிறது. அதிலும் பத்தாவது, பனிரெண்டாவது  பொதுத்தேர்வு 
எழுதும் மாணவர்களின்  நிலைமை மிகவும் மோசம். 

வீட்டில் தொலைக்காட்சியை துண்டித்திருந்தாலும்  அவர்களின் 
கவனத்தை திசை திருப்ப  எத்தனையோ  வழிகள் இருக்கத்தான் 
செய்கின்றது.  கிட்டத்தட்ட  இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து 
விட்டு  தேர்வு நெருங்கும்  நேரத்தில்  இப்படி ஒரு தலைவலி! அதிலே 
இந்த படுபாவிகள் இந்தியாதான் ஜெயிக்கும் என்று ஜோசியம்  சொல்லி
ஆர்வத்தை  வேறு அதிகப்படுத்துகின்றனர். 


கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்  கிரிக்கெட் வாரியத்திற்கு  சிறிது கூட
சமூகப் பொறுப்பு அவசியமில்லையா?  கடந்த ஆண்டு தேர்வின்போது 
ஐ.பி.எல் போட்டிகள் நடத்தினார்கள்.  நாடாளுமன்றத் தேர்தல் உள்ளதால்
பாதுகாப்பு தர முடியாது என்பதால்  2009 ல் தென் ஆப்பிரிக்கா போய்
போட்டிகள் நடத்தினார்கள். கல்லா கட்டினால் போதும் போல. 


இந்தியா 28 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுவதைப் பார்க்க துடித்துக் 
கொண்டிருக்கும் போது  இப்படி ஒரு பதிவா என்று  பாயாதீர்கள். 
கிரிக்கெட்டில் இந்தியா  வெற்றி பெற வேண்டும்  என்று  விரும்புவது 
மட்டுமே  தேசபக்தி  என்றால்  நான் தேசபக்தி  இல்லாதவன்தான்.

 

1 comment: