முதலில் மூன்று விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு பதிவிற்குள்
நுழைகின்றேன்.
அடிப்படையில் நான் சிவாஜியின் ரசிகன். அவரது படங்கள்
எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதாவது ஒய்வு கிடைக்கும்
வேளையில் அவரது படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன்.
காமராஜர் மீதும் எனக்கு மரியாதை உண்டு.
நான் விமரிசனம் முன்வைக்கும் ராஜபார்ட் ரங்கதுரை படத்தை
சிறு வயதில் பார்த்ததற்குப் பிறகு நேற்றுதான் பார்த்தேன். அதனால்தான்
இன்று பதிவு.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பகத்சிங் தூக்கு மேடைக்குப் போவது
போல ஒரு பாடல் வரும். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற அந்த பாடலில்தான் எனக்கு ஒரு பிரச்சினை. பாடல் ஆரம்பிக்கும்போதே
டி.எம்.எஸ் இன்கிலாப் ஜிந்தாபாத் என்று ஆரம்பிப்பார். ஆனால்
கோரஸ் இன்குலாப் ஜிந்தாபாத் என்று சரியாக பின்தொடரும்.
அன்று எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய பொடிசுகள் வரை தங்கள்
அரசியலைக் கூற திரைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர். அதே போல்
சிவாஜியும் தனது காமராஜர் பாசத்தையும் காங்கிரஸ் நேசத்தையும்
பல படங்களில் சொல்லியிருப்பார். ஆனால் இப்பாடலில் உள்ள
வரலாற்று திரிபுதான் ரொம்ப ஓவர்.
'நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெற வேண்டும்' என்று முதலில்
காமராஜரின் பத்திரிக்கைக்கு பகத்சிங் விளம்பரம் செய்வார்.
அதற்கடுத்து 'கர்ம வீரர்' புகழ் பாடுவார்.
இறுதியில் வந்த வார்த்தைகள்தான் கொடுமை.
"இங்கே ஒரு காந்தி இருக்கின்றார் அவர் வாழ்க!
தெற்கே ஒரு காந்தி வருகின்றார் அவர் வாழ்க ! "
காந்தியோடு கடுமையான கருத்து முரண்பாடு கொண்ட
பகத்சிங், காந்தியை வாழ்த்தினார் , அதுவும் மரணத்
தருவாயில் என்பது மிகவும் மோசமான ஒன்று. பகத்சிங்
மரணத்தின் முதல் நாளன்று லெனின் எழுதிய நூல்
ஒன்றை படித்துக் கொண்டிருந்தார் என்பதுதானே வரலாறு!
பகத்சிங் தூக்கிலடப்பட்ட காலத்தில் தமிழகம் கூட
அறியாத காமராஜரை வாழ்த்திப் பாடுவது என்பது எவ்வளவு
பெரிய திரிபு.
சிவாஜி தனது திரைப்படத்தில் காமராஜரை புகழ்ந்தது பெரிய
தவறல்ல. ஆனால் அதை பகத்சிங் வாயிலாக செய்ததுதான்
நிச்சயம் சரியல்ல. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
சரி இத்திரைப்படம் வந்தபோது இது தொடர்பாக ஏதேனும் சர்ச்சை
வந்ததா?
தோழர் காஷ்யபன்தான் சொல்ல வேண்டும்.

Sivaji Ganesan, Kamaraj and Kannadasan who wrote the song all are dead now. What is the use of writing now. Moreover that movie was a flop and no one will see now. Why you worry?
ReplyDeleteNothing can defame Bhagathsingh