Saturday, February 26, 2011

அப்படி என்ன அவசரம்? அறிவற்றவர்கள்!

மிகுந்த வேதனையோடும் எரிச்சலோடும்  எழுதும் பதிவு இது. 
இன்று  மாலை  ஒரு  ஏழு மணி  போல  வேலூர் ஆபிசர்ஸ் லைனில்
(இப்போது  அண்ணா சாலை ) மகனோடு  இரு சக்கர வாகனத்தில்  
சென்று  கொண்டிருந்தேன்.  பின்னே  ஒரு  ஆம்புலன்ஸ் வரும்  ஒலி
கேட்டு  ஒதுங்கினேன்.  
ஆனால்  அப்போது  சாலையில்  சென்று கொண்டிருந்தவர்களில்  ஒருவர் 
கூட  ஆம்புலன்சுக்காக  ஒதுங்கத் தயாராகவில்லை.  அரசுப்பேருந்து, 
தனியார் பேருந்து,  கார், இரு சக்கர வாகனம்  என யாருமே  வழி விடத் 
தயாராகவேயில்லை. ஆம்புலன்ஸ் எழுப்பிய சைரன், ஹாரன்  ஒலிகள் 
அவர்களது  காதிலேயே  விழாதது போல  பரபரப்பாக  சென்று 
கொண்டிருந்தார்கள். 

அப்படி  எதைச்சாதிக்க  கொஞ்சம் கூட மனிதாபிமானமே  இல்லாமல் 
போய்க்கொண்டிருந்தார்கள்  என்று  தெரியவில்லை.  நிச்சயமாக 
எகிப்து போல, துனிஷியா போல  மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு 
எதிராக போராடச்செல்லவில்லை . ஒரு உயிர்  போராடிக்கொண்டிருக்கிறது  என்ற உணர்வே  இல்லாமல்  வேலூர் கோட்டையைப் பார்த்து விட்டு வந்த சுற்றுலாப்பயணிகள் கும்பல் 
ஒன்று  ஆம்புலன்சை  நிறுத்தி விட்டு  சாலையைக் கடந்தது  ஒரு 
கொடுமை. 

அனைத்து நேரங்களிலும்   இந்த தேசத்தின் மக்கள்  இவ்வளவு  வேகமாகவா  உள்ளார்கள்.  ரேஷன் கடையிலோ,  வங்கியிலோ  
வரிசையில் நிற்க வேண்டுமென்றால் அலுத்துக் கொள்வார்கள். 
அவர்களின் பணிச்சுமை, குறைந்து வரும் ஊழியர்  எண்ணிக்கை 
குறித்தெல்லாம்  இவர்களுக்கு  என்ன  கவலை? வாக்களிக்க நிற்பது 
மிகப் பெரிய தியாகம்!

ஆனால் திரை அரங்குகளிலோ  அல்லது, திருப்பதி, வேலூர் பொற்கோயில்  போன்ற  கோவில்களிலோ  எத்தனை மணி நேரம் 
வேண்டுமானாலும்  முகம் சுளிக்காமல்  காத்திருப்பார்கள்.
இப்படி கொஞ்சம் கூட  சமூகப் பொறுப்பே  இல்லாதவர்களைப் 
பார்த்து கோபத்துடன் திட்டத் தோன்றுகிறது. 

அறிவற்றவர்கள் 

 


  

3 comments:

  1. திருநெல்வேலியிலும் இதே போன்று தான். எல்லாம் காலம் செய்யும் கொடுமை!

    ReplyDelete
  2. மிகவும் சரி. வழி விடாதவர்களை உள்ளே தள்ள வேண்டும். பல வெளிநாடுகளும் இப்படி ஒரு rule இருக்கிறது. நம் ஊரிலும் அதை கொண்டு வந்து ஒழுங்காக நடைமுறை படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. சென்னையில் இத விடக் கொடுமைகள் நடக்கும்

    ReplyDelete