சர்வ சக்தி கொண்டவராக கருதப்பட்ட துனீஷியாவின் ஜனாதிபதி
சைனலாபுடீன் பென் அலி பதவி விலகி எங்கோ ஓடிவிட்டார்.
முப்பதாண்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்திய எகிப்து
ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அந்நாட்டு மக்கள் தூக்கி
எறிந்து விட்டனர். நாற்பது ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் முயாமர்
கடாபிக்கு எதிராக லிபிய மக்கள் போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
ஏமனிலும் சூடானிலும் கூட ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு வலுத்து
வருகின்றது.
இதுநாள் வரை கொடுமைகளைப் பொறுத்திருந்த இந்நாடுகளின்
மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாமல்
எகிப்திலும் துனீஷியாவிலும் வெற்றியும் பெற்று விட்டார்கள்.
அமெரிக்கா ஆடிப்போயிருக்கிறது. அரேபிய அரசர்கள் அச்சத்தில்
தவிக்கிறார்கள்.
அகற்றப்பட வேண்டிய ஆட்சியாளர்கள் பட்டியலில் மக்கள் விரோத
மன்மோகன்சிங்கிற்கு முக்கிய இடம் உண்டு. அவரையும் காங்கிரஸ்
கட்சியையும் நாடு கடத்துவதற்கான நியாயங்கள் முழுமையாக
உண்டு.
போராட்டங்கள் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் இளைஞர் பட்டாளம்தான் முன் நின்றது.
அது போன்ற நிலை இங்கு வருமா? சந்தேகம்தான், இந்திய
இளைஞர்கள்தான் பாழாய்ப்போன உலகக்கோப்பையை
பார்க்க தொலைக்காட்சி முன் தவமிருக்கின்றார்களே!
No comments:
Post a Comment