கேரளா முதல்வர் என்று தலைப்பில் எழுதி விட்டு படத்தில் ஏன் ரகுவரனையும் சத்யராஜையும் சூர்யாவையும் போட்டுள்ளேன் என்று யோசிக்கிறீர்களா?
சமீப காலத்தில் தமிழ்த் திரைப்படத்தில் கொடூர வில்லன்களாக யாரை சொல்வீர்கள்?
பாட்சா படத்து மார்க் ஆண்டனி,
அமைதிப்படையின் அமாவாசை,
விக்ரம் 2 படத்தின் ரோலெக்ஸ்.
இப்போது கேரள முதல்வருக்கான கோஷ்டிப்பிரச்சினையில் முன்னணியில் இருப்பவர்கள் மூவர்.
கே.சி.வேணுகோபால் - பொதுச்செயலாளர், காங்கிரஸில் இருக்கும் தீவிர சங்கி. தொகுதி மறுவரையறை பிரச்சினையில் கூட தடுமாற்றத்தை காண்பித்த மோடி ஆதரவாளர்.
வி.டி.சதீசன் - எதிர்க்கட்சித் தலைவர். தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி. வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் சார்ட்டர்ட் விமானத்தில் இன்னொரு குற்றவாளியோடு மங்களூர் சென்று யாரையோ சந்தித்தார். யாரை சந்தித்தார்? ப்ளேனுக்கு காசு யார் கொடுத்தது என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.
ரமேஷ் சென்னித்தலா : அந்த காலத்து ரௌடி.
மூன்று பேருமே எரிகிற கொள்ளிகள்.
அதிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று முடிவு செய்துதான் கேரளா ஒரு முதல்வரை பார்க்கப் போகிறது.
தோழர் ஈ.எம்.எஸ், ஈ.கே.நயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் இருந்த இடத்தில் மூன்றில் ஒரு தறுதலை உட்காரப் போகிறது.

No comments:
Post a Comment