மேற்கு வங்கத்தில் நடந்தது தேர்தல் அல்ல. பேய்க்கும் பேய்க்கும் சண்டை.
"பரிபர்த்தன் (மாற்றம்) என்ற சொல்லுக்கு மயங்கி திரிணாமுல் காங்கிரஸ் என்றொரு பேயை நாற்காலியில் உட்கார வைத்த மேற்கு வங்க மக்கள் மீண்டும் இன்னொரு முறை "பரிபர்த்தன் (மாற்றம்) என்ற பெயரில் இன்னொரு பேயான பாஜகவை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.
நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மம்தா அம்மையார் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கு ஆட்டுத்தாடியாகப் போன ஆரென்.ரெவிக்குத்தான் இப்போது சிக்கல்.
அவர் என்ன செய்யப் போகிறார்?
மம்தாவை டிஸ்மிஸ் செய்யலாம். அது மட்டும்தான் முடியும்.
அதற்குப் பிறகு?
மேற்கு வங்கத்தின் வீதிகளில் இரண்டு கட்சிகளின் குண்டர்களும் மோதுவார்கள். ரத்த ஆறு ஓடும்.
அதற்குப் பின்?
சட்ட சபை????
தேசிய கீதத்தை முதலில் ஒலிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் சீன் போட்டது போல அங்கே சீன் போட மாட்டார். பாஜக அரசும் அவருக்கு சிக்கலை உண்டாக்காது.
சட்ட சபை வந்த ரெவியை தமிழ்நாட்டில் கண்ணியமாக திருப்பி அனுப்பினார்கள்.
மம்தா கட்சியினர் அப்படிப்பட்ட கண்ணியமான ஆட்கள் கிடையாது. ஏற்கனவே மேற்கு வங்க சட்ட சபையில் ரௌடித்தனம் செய்து எல்லாவற்றையும் உடைத்துத் தகர்த்தவர்கள்.
மேற்கு வங்கம் மட்டுமல்ல இந்தியாவே விந்தையான காட்சிகளை பார்க்கப் போகிறது.


No comments:
Post a Comment