Friday, October 31, 2025

தமிழர்களை இழிவு படுத்தும் மோடியை துரத்துவோம்

 


ஒடிஷா மாநில சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்களை திருடர்கள் என்று இழிவுபடுத்திய மோடி அதே நச்சை இப்போது பீகாரிலும் கக்கியுள்ளார்.


இரண்டாண்டுகள் முன்பாக பீகாரிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சங்கிகள் ஒரு போலி வீடியோ மூலமாக பொய்ப்பிரச்சாரம் செய்ய, அந்த பொய்யர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இப்போது அதே பொய்யை மோடி கட்டவிழ்த்துட்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து தமிழர்களை பொய் சொல்லி இழிவுபடுத்தும் மோடி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழ் மொழி, திருக்குறள் என்றெல்லாம் வேஷம் போடும் மோடியை இனி தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது.

மோடியே வெளியேறு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையும் ஆகும்.

உரக்கச்சொல்வோம்

GO BACK MODI


No comments:

Post a Comment